நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தர்மராஜா சண்முகேஸ்வரி
வயது 5227 நவம்பர், 1967 – 29 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- இணுவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட தர்மராஜா சண்முகேஸ்வரி அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு, உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும்,சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கியதும், திருத்தலங்களால் சூழ்ந்த இடமான இணுவில் கிழக்கில் 27/NOV/1967 ஆம் ஆண்டில் திரு.திருமதி மாதவர் செல்லர் தர்மராஜா குணரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளாக சண்முகேஸ்வரி அவர்கள் அழகுக் குழந்தையாக இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சண்முகநாதன்,விக்னேஸ்வரன், சிவகுமாரன், கேதீஸ்வரன் போன்ற உடன்பிறப்புகளுடன் வளர்ந்து பெரியவளாகியதும்,திரு.திருமதி நாகமுத்து முத்துராக்கு தம்பதிகளின் அன்பு மகன் திருநாவுக்கரசு(திரு) எனும் வீரம் நிறைந்த ஆண் மகனைத் திருமணம் முடித்து இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்ததன் பயனாக பிரியங்கா, ஓவியா எனும் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் கனிவான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்த இவர், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதில் கைதேர்ந்தராக விளங்கியதுடன், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார்.
இவ்வாறு கணவர், பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 29.12.2019 இல் 52 வயதில் கனடாவில் உள்ள Mississauga நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
இணுவில் தந்த என்றும் இன்ப உறவே
அணுவில் கலந்த நல்ல அன்பு ஆத்மாவே
புன்னகை ததும்பும் முகமுடன் காட்சிதரும்
அன்னையே எங்கள் ஆருயிர் உள்ளமே
நின்னை நினைத்து கண்ணில் நீர் வடிய
ஏக்கமுடன் நித்தம் நிமிடங்கள் கழிகிறதே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

