ஆறுதல்

மரண அறிவித்தல்

தாட்சாயணி செல்லத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தாட்சாயணி செல்லத்துரை

வயது 809 செப்டம்பர், 1938 – 13 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
அளவெட்டி
வாழ்ந்த இடம்
அளவெட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அளவெட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தாட்சாயணி செல்லத்துரை அவர்கள் 13-04-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்தையா(விதானையார்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா நல்லபிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லத்துரை(பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற செல்வறஞ்ஜினி, செல்வறாஜினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தில்லையீஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியை), காலஞ்சென்ற ஸ்ரீதரன்(பெற்றோலியக் கூட்டுத்தாபனம்), கெங்காதரன், செல்வநாயகி, சுபாஜினி, சசிதரன், கலாநிதி, காலஞ்சென்ற பகீரதன், ஞானகணேசன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஈஸ்வரன்(சுவிஸ்), சிவகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிர்மலாதேவி அவர்களின் அன்பு மைத்துனியும்,

ஹிசாயினி, கிஷாந், சாயிந், டிலான், பிரியன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் செழிப்பு மிகு இடமும், நெல்வயல்கள், பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள், புகையிலைத் தோட்டம் என அழகு நிறைந்த அளவெட்டியில் 09-09-1938 இல் விதானையார் முத்தையா நாகம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வியாக தாட்சாயணி அழகிய குழந்தையாக அவதரித்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் தில்லையீஸ்வரி, ஸ்ரீதரன், கெங்காதரன், செல்வநாயகி, சுபாஜினி, சசிதரன், கலாநிதி, பகீரதன், ஞானகணேசன் போன்ற உடன் பிறப்புகளுடன் கூடி குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் கந்தையா நல்லபிள்ளை தம்பதிகளின் அழகு மகன் பொலிஸ் உத்தியோகத்தராக கடமை புரிந்த செல்லத்துரை என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து செல்வறஞ்ஜினி, செல்வறாஜினி எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று கண்ணெனக்காத்து வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர் பெறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்ததுடன்,சுவையான உணவுகள் செய்வதிலும்,வீட்டை சுத்தமாக வைத்திருப்பதை கடமையாக எண்ணிச் செயற்பட்டார்.

இவ்வாறு பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 13.04.2019 இல் 80 வயதில் அளவெட்டியில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"அளவெட்டி மலரே
அன்பு உறவே
பாசம் நிறைந்த
பண்பு மதியே
உந்தன் நினைவாய்
உள்ளம் உருகி
ஒரு பிடி பூத்தூவி
உள்ளம் உருகிறோம்""

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.