ஆறுதல்

மரண அறிவித்தல்

சண்முகம் தவக்குமார் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சண்முகம் தவக்குமார்

வயது 5123 மே, 1967 – 17 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
வல்வெட்டி மாடந்தை
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வல்வெட்டி மாடந்தையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகம் தவக்குமார் அவர்கள் 17-04-2019 புதன்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் தனவதியம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்ற தம்பிராசா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரஞ்சிதமலர்(கிளி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

திவேஸ், திவேகா, தினுஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நந்தினி, அப்பன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வம், பாஸ்கரன், ஜெயரூபன், வதனா, யசோதா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

தம்பிராசா, காலஞ்சென்ற செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கனகசபை, சிவசுந்தரம், பாலசுந்தரம், பாலாமணி, குஞ்சுமணி, ஞானமணி ஆகியோரின் பெறாமகனும்,

சுஜன்(கனடா), துசி(கனடா), சஜித்(கனடா), தேனிசா(கனடா), லக்சிகா(கனடா), நிர்மலன்(இலங்கை), மேனுசா(இலங்கை), கயல்பிரியா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

கலிஸ்கா, ஜிவானி ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

மதி, வவா, தயா, உதயன், மோகன், கிளி, சிவம், உதயன், உசா, நிசா, சுதன், விஜிதா, கிளி, அமுதா, ரவி, கார்த்திகா, சிந்துஜா, கார்த்தீபன், கண்ணன், கெளரி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

தர்சன், தர்சனா ஆகியோரின் பாசமிகு அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, அன்னம்மா, பூபாலு, நல்லமுத்து ஆகியோரின் மூத்த பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

தவக்குமார் வரலாறு:-

இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும், அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும், வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த வல்வெட்டி மாடந்தையில் 23-05-1967 இல் சண்முகம் தனவதியம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் தவக்குமார் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் நந்தன் என செல்லமாக அழைக்கப்படும் இவர் அன்பும் அழகும் நிறைந்ததுடன் நந்தினி, அப்பன் ஆகிய உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும், தம்பிராசா தங்கம்மா தம்பதிகளின் அழகுப் பெண்ணான ரஞ்சிதமலர் அவர்களை திருமணம் முடித்து திவேஸ், திவேகா, தினுஸ் போன்ற பிள்ளைகளைப் பெற்று கவனமாக பாதுகாத்து வளர்த்தார்.

இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார்.

குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டதுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.

அனைவருடனும் கலகலப்பாகவும் பாசத்துடனும் உரிமையுடனும் பழகும் சுபாவத்தினையுடையவர் மட்டுமன்றி ஒன்றுகூடல் போன்ற பொது நிகழ்வுகளின் போது தானாகவே முன் வந்து பொறுப்பினை எடுத்து தொடக்கத்தில் இருந்து இறுதிவரை நின்று தான் எடுத்த பொறுப்பினை நிறைவேற்றும் தன்மையினை தன்னகத்தே கொண்டிருந்த அன்பு உள்ளம் கொண்டவர்.

இவ்வாறு அனைவருக்கும் உதவிகள் செய்து மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 17-04-2019 இல் 51 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இறையடி எய்தினார்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

’’வீரமிகு பூமியின்
வீரப் புதல்வனே
பாச பந்தம் நிறைந்த
அருமை உறவே
அன்பு மனம் கொண்ட
அழகிய உருவே
உன் நிலை கண்டு
ஊரே அழுகிறது "

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.