ஆறுதல்

கண்ணீர் அஞ்சலி

தவயோகநாதன் மதூசன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தவயோகநாதன் மதூசன்

பொருளியல் துறை பட்டதாரி

வயது 243 ஏப்ரல், 1996 – 3 டிசம்பர், 2020

பிறந்த இடம்
சுவிஸ்
வாழ்ந்த இடம்
New Malden

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

சுவிசைப் பிறப்பிடமாகவும், லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த மதூசன் தவயோகநாதன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

தமிழ்த் தேசிய செயற்பாட்டாளராகவும், தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்தின் கிறபுண்டன்(கூர்) தமிழ் வித்தியாலய ஆரம்பகால பொறுப்பாளராகவும் நீண்ட காலம் பணிபுரிந்து சுவிஸ் வாழ் தமிழ் மாணவர்களின் தாய்மொழிக் கல்விக்காக கால நேரம் பாராது அயாராது சேவையாற்றி தற்போது லண்டனில் வாழ்ந்துவரும் திரு. தவயோகநாதன் (ரகு), திருமதி, சுதாராணி தவயோகநாதன் ஆகியோருடைய செல்வப் புதல்வன் செல்வன். தவயோகநாதன் மதுாசன் (பொருளியல் துறை பட்டதாரி) அவர்கள் அகாலமரணம் அடைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைகின்றோம்.

செல்வன். தவயோகநாதன் மதுசன் அவர்களின் ஆத்மா அமைதியடைய இறைவனை பிராத்திப்பதுடன் அவரை இழந்து நிற்கும் அவருடைய குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சுவிற்சர்லாந்தில் தேசியப்பணி, தமிழ்மொழி, தமிழ்க்கலை கல்விப்பணிகளில் ஒன்றாக இணைந்து பணியாற்றிய தேசிய செயற்பாட்டாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தமிழ் வித்தியாலயப் பொறுப்பாளர்கள், தமிழ் ஆசிரியர்கள், தமிழ்க்கலை ஆசிரியர்கள் சார்பாக

நாகராஜா விஜயகுமார்(சங்கர்)
முன்னாள் பரீட்சைப்பொறுப்பாளர் - கல்விச்சேவை
தேர்வுப்பொறுப்பாளர்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்

— நாகராஜா விஜயகுமார்(சங்கர்)

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.