மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தயாளன் தேவராஜன்
வயது 6130 ஜூன், 1957 – 11 ஜூன், 2019
- பிறந்த இடம்
- அளவெட்டி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தயாளன் தேவராஜன் அவர்கள் 11-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தேவராஜன் குணலட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான அரசரட்ணம் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுமதி அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தூரன், கிரிஷான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கஜானி அவர்களின் அன்பு மாமனாரும்,
ரமணி(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,
தவராஜன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
லக்சாயினி, ஜனார்த்தனன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
Dr. மாலதி(ஐக்கிய அமெரிக்கா), ரவீனா, சூரியகுமார்(கண்ணன்), துஷியந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெகசோதி, சூரியகுமாரி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்(மரவள்ளி,பூசனி),வாழைத்தோட்டம், புகையிலைத் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த அளவெட்டியில் 30/Jun/1957 இல் திரு.திருமதி தேவராஜன் குணலட்சுமி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக திரு.தயாளன் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் ரமணி எனும் உடன் பிறப்புடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி அரசரட்ணம் பாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகள் சுமதி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து செந்தூரன், கிரிஷான் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 11.06.2019 இல் 61 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
கலகலப்பாக பேசும்
......கருணை உள்ளமே
கருணைக் கடலே
.......காவிய நாயகனே
பளபளப்பாக மின்னிடும்
.......பவள மேனியே
இடை நடுவில் பிரிந்து
........ஏங்க வைத்தீரே.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

