1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
திலீபன் தவச்செல்வம்
வயது 1622 ஏப்ரல், 1992 – 26 ஜனவரி, 2009
- பிறந்த இடம்
- இத்தாலி
- வாழ்ந்த இடம்
- வல்லிபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇத்தாலியைப் பிறப்பிடமாகவும் வள்ளிபுனத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திலீபன் தவச்செல்வம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திலீபன் என்றதுமே தித்திக்கும் எம்மனசு
பனிமலரே எங்கள் முழுமதியே
பருவகாலத்து பனித்துளியே
கோடை காலத்துக் குளிர்நிலவே
கொஞ்சிப் பேசும் உன் பேச்சும்
பகை மறக்கவைக்கும் உன்பார்வையும்
பேசத் துடிக்கவைக்கும் உன் சாந்தமுகமும்
கோவத்தை மறக்கவைக்கும் உன் கீழ்ப்பிவும்
நேசத்தை உதடாக்கி முத்தம் செய்யும் உன் பண்பும்
துள்ளித்திரியும் மானும் கொஞ்சிப்பேசும் கிளியும்
உன்னைக் கண்டால் பேசும்
அஞ்சாத உன் நெஞ்சுக்கு சிங்கமும் அனுமதி கேட்கும்
திறமைகள் பல செய்து தீமிரித்து நடந்தவனே - கண்ணா
புலரும் காலைப் பொழுதிலே புத்தரின் புத்திரர்கள்
போதித்த போதனையில் - எம்வீட்டுக்
குத்துவிளக்கு ஒன்று ஒளி அற்றுப் போனதன்று
கயவன் இட்டகுறி உன் கண்ணுக்கு எட்டாமல் போனதென்ன
தந்தை நான் இருந்தும் அதை தடுக்க முடியவில்லையே
கருவில் சுமர்ந்த உன்தாயும் கூட - அதை
கணிக்க முடியவில்லையே
நீ கற்க வேண்டிய கல்வியும் - நீ
படைக்க வேண்டிய சாதனையும் - திலீபா
வாழவேண்டிய உன் வசந்தமான எதிர்காலமும்
சொற்ப நேரத்தில் தொலைந்தே போனது
முற்றத்தில் நாம் மூவராய்
சொற்பத்தில் நாம் இருவராய்
முத்தைத் தொலைத்த மூக்குத்தியாய்
முள்ளம் தண்டிழத்த முடவனாய்
முகவரி இழந்த காகிதமாய்
விழி இழந்த குருடராய் நாம் ஆனோம்
வேரிழந்த மரமாய் காடிழந்த விலங்காய்
நீரில்லா மீனாய் நெருப்பில் விழுந்த புழுவாய்
நாம் இங்கு துடிக்கிறோம் கண்ணா
எங்கள் வாழ்வுக்கு அர்த்தம் புகட்டியவனும் நீதான்
எங்கள் உயிருக்கு உணர்வு ஊட்டியவனும் நீதான்
நீ பேசிய வார்த்தைகள் போதுமடா கண்ணா
காலமும் கடர்ந்து ஆண்டு ஒன்று ஆனது - ஆனாலும்
உன்கால் தடங்கள் மாறவில்லை எங்கள் முற்றத்து மண்ணில்
வேரூன்றி நிற்கிறது எம் உள்ளத்துப் பூங்காவில்
மாறாத நினைவுகளாய் றோஜாச் செபிகளாய்
உறவுகள் சிதறி அங்குமிங்கும் வாழ்ந்தாலும் - திலீபா
உன் நினைவுகள் எம் நெஞ்சில் நீந்துகின்றது
நீலவானத்தில் நிற்கும் முழுநிலவாய்
மறக்கமுடியுமா கண்ணா உன்னை - இந்த
மானிட வாழ்வில் தான்
வலிகொண்டு துடிக்கும் எம் இதயத்தை
தென்றலாய் தேற்றற ஓடிவா
தேவையான அமைதியை வீதியிலே தேடுகிறோம்
தேடியும் கிடைக்கவில்லை ஐயா
ஓடியே வந்திடுவாய் மறுபடியும் இங்கே
காத்திருக்கின்றோம் நீ நிட்சயமாய் வருவாய் என்று
ஓர் ஆண்டுகள் அல்ல ஓராயிரம் ஆண்டு கடந்தாலும் - திலீபா
உன் நினைவுகள் எம் உள்ளத்தில்
என்றென்றும் நிலைத்திருக்கும்.
வீட்டு முகவரி
21, DEDISHAM CLOSE
CRAWLEY
RH10 6SA
U.K.
— உன்பிரிவால் வாடும் அப்பா, அம்மா மற்றும் உறவினர்கள், நண்பர்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

