மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தேவாம்பிகை சிவக்கொழுந்து
1 நவம்பர், 2016
- பிறந்த இடம்
- இணுவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- உடுப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் கிழக்கு சிவகாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட தேவாம்பிகை சிவக்கொழுந்து அவர்கள் 01-11-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியர்- இணுவில் கிழக்கு), நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து(இளைப்பாறிய பிரதம தபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,
தேவகுமாரி(ஆசிரியை- தொண்டமானாறு வீரகத்தி மகாவித்தியாலயம்), கேசகுமாரி(வடக்கு மாகாணசபை திட்டமிடல் பிரதேச செயலகம்- கரவெட்டி), புவனகுமார்(ஐக்கிய அமெரிக்கா), புவனகுமாரி(ஆசிரியை- விவேகானந்தா தேசிய கல்லூரி, கொழும்பு), தாமகுமாரி(அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பணிமனை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான ரேணுமதி, கௌரிதேவி, தேவராஜன், ஜெகந்நாதன், குருலிங்கம், மற்றும் சிவஈஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr. யோகேந்திரன்(வைத்திய பொறுப்பதிகாரி- ஆயுர்வேத வைத்தியசாலை, கரவெட்டி), கேதீஸ்வரன்(ஆசிரியர்- குருநாகல் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, செல்லமுத்து, பாலசிங்கம், குமாரசூரியர், பூரணம், ஆறுமுகம், மற்றும் திசைவீரசிங்கம்(ஜமேக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காகினி(உடுப்பிட்டி மகளிர் கல்லூரி), அகிலேஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

