நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தேவநேசன் சிந்தியா
வயது 5915 செப்டம்பர், 1960 – 9 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- டோட்மண்ட்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇறையேசுவின் இனிய நாமத்தில் 09-10-2019 இல் எங்களை விட்டு உன்னதமான இறைவனின் உயர் இருக்கையுடன் குடிபுகுந்து ஆன்ம இளைப்பாற்றி அடைந்திருக்கும் என் அருமை மனைவி அமரர் சிந்தியா தேவநேசன் எங்களை விட்டு பிரிந்த முப்பத்தி ஓராவது நாளில் அவரை நினைவு கூறுவதற்காக அவர் இறந்த செய்தி கேட்டதும் ஓடோடி வந்து எங்களுக்கு அனைத்து ஆறுதல் கூறிய உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் 17-10-2019 இல் நடைபெற்ற நல்லடக்க இறை ஆராதனையில் கலந்துகொண்ட உறவினர்கள், நண்பர்கள், மாரநாதா தமிழ் திருச்சபை சுவிற்ரோ யேர்மனி லிவிங் கோப் இன்ரகஸ்தேஸ் சர்ச் டோட்மோண்ட் யேர்மனி, இலங்கையில் மெதடிஸ்த சர்ச் டோட்மோண்ட் யேர்மனி, மற்றும் போதகர்களுக்கும் வெளிநாடுகளில் இருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு வருகை தந்த உறவினர், நண்பர்களுக்கும் அடக்க ஆராதனைக்கு வேண்டிய அனைத்துக் காரியங்களுக்கும் எங்களுடன் இணைந்து உதவி புரிந்த அனைத்து சபையாருக்கும், சிந்தியாவின் உடல் வைக்கப்பட்டிருந்த பேழை பெட்டியை வண்ணமலர் வளையங்களாலும் மலர்க்கொத்துகளாலும் அலங்கரித்த உறவினர், நண்பர்களுக்கும் அன்றில் இருந்து இன்று வரை ஒவ்வொருநாளும் எங்களைத் தேடி வந்து ஆறுதல் கூறி உபசரித்து, எங்கள் கரங்களை பற்றிக்கொண்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இயேசுவின் இனிய நாமத்தில் நானும் எனது பிள்ளைகளும் எங்கள் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
வாழிவில் அன்பும் கருணையுன் நிறைந்த தேவநேசன் சிந்தியா அவர்களின் வாழ்க்கை வரலாறிது...
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும், மீன்பாடும் தேன் நாடு என அழைக்கப்படும் மட்டக்களப்பில் ஜோன் தங்கராஜா கிரேஸ் நகுலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகளாக சிந்தியா அவர்கள் 15/SEP/1960 இல் பிறந்தார். நிமால், பிரிசிலா, ஏஞ்சலா போன்ற தனது அன்பான உடன்பிறப்புகளோடு ஓடி ஆடி விளையாடி வளர்ந்த இவர், மட்டக்களப்பில் உள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை பயின்றார். அதற்கு மேல் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள ஊட்டியில் பயின்ற இவர், 1979 இல் இலங்கையில் ஏற்பட்ட புயல், பெருவெள்ளம் காரணமாக தனது குடும்பத்தினரை காண வேண்டி தாயகம் திரும்பினார்.
முழுக் கதையையும் வாசிக்க
பின்னர் குடும்ப சூழல் காரணமாக மேற்கொண்டு படிக்காமல், மட்டக்களப்பில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக பணியாற்றினார். இவர் திருமண வயதை எட்டியவுடன் தனது குடும்பத்தினர் நிச்சயத்தபடி ஜோன் செல்வநாயகம் சந்தோசம் தம்பதிகளின் அன்பு மகனான தேவனேசன் அவர்களை 1988 ஆம் ஆண்டு மணமுடித்தார். இல்லற வாழ்வை இனிமையாக வாழ்ந்ததன் பயனாக எவநேசர், எல்கா, இமானுவேல் எனும் அன்பு செல்வங்களை பெற்றெடுத்த இவர், 1991 இல் ஜேர்மனிக்கு குடிபெயர்ந்து வாழ்த்தொடங்கினார்.
தனது அன்பான செயல்பாடுகளால் குடும்ப வாழ்க்கையை இனிமையாக கொண்டு சென்ற இவர், வயலின் பாசிப்பதை தனது பொழுதுபோக்காக கொண்டிருந்தார்.
தனது பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றிய சிந்தனை கொண்ட இவர், தனது பாசத்திற்குரியன் அனைவரையும் நிகழ்காலத்தில் துன்பத்தில் ஆழ்த்தி 09.10.2019 இல் தனது 59 வயதில் ஜேர்மனியில் உள்ள Dormund நகரில் திடீரென காலமானார்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

