மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தில்லையம்பலம் கமலாம்பிகை
வயது 6629 டிசம்பர், 1952 – 13 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- நெடுந்தீவு
- வாழ்ந்த இடம்
- வன்னேரிக்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், வன்னேரிக்குளத்தை நிரந்தர வதிவிடமாகாவும் கொண்ட தில்லையம்பலம் கமலாம்பிகை அவர்கள் 13-12-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், மனோன்மனி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும், ஐயம்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
திருநாவுக்கரசு(திரு- ஸ்கந்தபுரம் விஸ்னு பல்பொருள் வாணிப உரிமையாளர்),வசந்தகுமாரி(வசந்தா), ஜெகதீஸ்வரன்(சுதன்), ஜெயசீலன்(மனோ), காலஞ்சென்ற உதயகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கவிதா(புத்தளம்), விக்கிரைசா(சந்திரன்- வன்னேரி), விஜிதா(வன்னேரி), ஜீவா(ஸ்கந்தபுரம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, கமலாதேவி(ஸ்கந்தபுரம்), சீதாலக்சுமி(வன்னேரிகுளம்), சந்திரா(வன்னேரிகுளம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கார்த்திகா, கஜன், விஸ்னு, கிருசாந், கபிசன், கஜானா, கவிசாளினி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
விஜிதரன்(சுவிஸ்), வினோதரன், விதுஷா(பெரண்டினா Micro finances), தாரணி, துஷாந் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இல. 90/3 ஐயனார்புரம், வன்னேரிக்குளத்தில் அமைந்துள்ள அவரது மகளின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் 15-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு ஐயானாந்தபுரம் இந்து மாயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும்,படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த நெடுந்தீவு மேற்கில் 29/DEC/1952 இல் திரு.திருமதி வல்லிபுரம், மனோன்மனி தம்பதிகளின் அன்பு மகள் கமலாம்பிகை அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் கணபதிப்பிள்ளை, கமலாதேவி, சீதாலக்சுமி, சந்திரா எனும் சகோதரங்களுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி ஐயம்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் மகன் தில்லையம்பலம் எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தனர்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர்களின் வாழ்க்கைப் பயனாக திருநாவுக்கரசு,வசந்தகுமாரி, ஜெகதீஸ்வரன், ஜெயசீலன், உதயகுமார் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்தனர்
பிள்ளைகள் பெரியவர்களாகியதும் கவிதா, விக்கிரைசா, விஜிதா, ஜீவா என்பவரை திருமணம் முடித்து வைத்து கார்த்திகா, கஜன், விஸ்னு, கிருசாந், கபிசன், கஜானா, கவிசாளினி, விஜிதரன், வினோதரன், விதுஷா, தாரணி, துஷாந் எனும் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் வீட்டை அழகாக வைத்திருப்பதிலும், பூமரங்கள் வளர்பதிலும் அலாதி விருப்பம் கொண்டவராகவும், அனைவருக்கும் உதவி செய்வதிலும்,ஊரவருடன் அன்பாக பேசுவதுடனும் இரக்க குணம் கொண்ட நல் உள்ளமாக விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார்,உறவினர், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 13.12.2019 இல் 66 வயதில் வன்னேரிக்குளத்தில் இயற்கை மரணம் அடைந்தார்.
எங்கள் அன்னையே அன்பின் வண்ணமே
தங்கள் அணைப்பில் நித்தம் வளர்த்த
பொங்கும் சிரிப்பே பொழில் மிகு அழகே
தங்கக் குணமுடன் தரணியில் புகழுடன் வாழ்ந்து
எங்கே போனீர் எமை விட்டு
இங்கே ஏங்கி நித்தம் அழுகிறோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

