மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தில்லையம்பலம் சிவபாக்கியம்
வயது 8411 ஆகஸ்ட், 1934 – 5 மே, 2019
- பிறந்த இடம்
- மட்டுவில் தெற்கு
- வாழ்ந்த இடம்
- பாவற்குளம், Aulnay-Sous-Bois
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா பாவற்குளத்தை வதிவடமாகவும், பிரான்ஸ் Aulnay-Sous-Bois ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் சிவபாக்கியம் அவர்கள் 05-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, துரைசாமி, கதிரவேலு, சின்னம்மா, சண்முகநாதன், சின்னராசா, குமாரசாமி, ராமுப்பிள்ளை, ராசபூபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான மகேந்திரராசா, சகுந்தலாதேவி, சுசீலாதேவி(ஓய்வு பெற்ற தாதி உத்தியோகத்தர்- யாழ்ப்பாணம்), சாரதாதேவி(பிரான்ஸ்), விஜயேந்திரன்(பிரான்ஸ்), விமலாதேவி(இலங்கை), விமலேந்திரன்(விசு- லண்டன்), மாலினி(பிரான்ஸ்), தவேந்திரன்(கண்ணன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம்(சின்னராசா) மற்றும் பிரபாகரன், ருக்குமணி, தேவி, பவளராணி, அலோசியஸ், சகலகலாவல்லி, கோபாலபிள்ளை, சுபாஜினி(சோபா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான விஜயதர்சன், விஜயசுதர்சன் மற்றும் சுபிகரன், சுகந்தினி, கார்த்திகா, பாரதிதாசன்(பரா), நிரஞ்சன், தமிழினி, சசிகுமார், தர்சினி, தர்மினி, செந்தூரன், சிந்துயா, றோய், டெய்சி, சாள்ஸ், ஜேம்சன், கஸ்தூரி, விதுஷா, வனஜா, கோபிநாத்(கோபி), சோபிதா, சிந்துஜன், மதுஷா, மிதுஸ், தினுஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தருன், சதுசன், லக்சுமி, பிறவின், ஜிந்துஜன், லக்ஷன், அஸ்வின், அபிசா, அஜய், பிறஜன், பிறனவி, சயன், சயந்தவி, தபுக்சனா, பிறிக்சனா, தபிக்சன், டிலக்சி, அபினஜா, அபிநாத், லதுஷன், அபிசேக், ஜொஹ்ன், ஜொல்ய், ஜொயல், லுட்வின் ஓவியா, ஆன் அலக்கா, லாணியா, தஸ்வினி, அஸ்வின், அஸ்வினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,படித்த மக்களை அதிகம் கொண்டதும்,தெங்கு தோட்டம்,வாழைத்தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்ப்பாணத்தின் தென்மராட்சி மட்டுவில் தெற்கில் 11/AUG/1934 ஆம் ஆண்டில் வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளுக்கு அன்பு மகளாக சிவபாக்கியம் அவர்கள் இவ் ஊரில் அவதரித்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் வேலுப்பிள்ளை, துரைசாமி, கதிரவேலு, சின்னம்மா, சண்முகநாதன், சின்னராசா, குமாரசாமி, ராமுப்பிள்ளை, ராசபூபதி போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் நாகமுத்து அன்னமுத்து தம்பதிகளின் அழகிய ஆண் மகனான தில்லையம்பலம் என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து மகேந்திரராசா, சகுந்தலாதேவி, சுசீலாதேவி, சாரதாதேவி, விஜயேந்திரன், விமலாதேவி, விமலேந்திரன், மாலினி, தவேந்திரன் எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று கண்ணெனக்காத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் தனது குடும்பத்தில் அன்பு கொண்டதுடன் சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும்,எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 05.05.2019 இல் 84 வயதில் பிரான்ஸில் உள்ள Aulnay-sous-Bois நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"மட்டுவில் தந்த
......மாசற்ற உறவே
மக்கள் மீது
......பாசம் கொண்டு
அன்பு வைத்த
.....ஆசை உறவே
அகிலம் துறந்ததால்
......உம்மை இழந்தோம்"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

