மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தில்லைநடராஜா வள்ளியம்மா
வயது 7131 ஜனவரி, 1948 – 22 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- அல்வாய் திக்கம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வடமராட்சி திக்கத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநடராஜா வல்லியம்மா அவர்கள் 22-07-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தில்லைநடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஜெயவீரசிங்கம்(விதானையார்) அவர்களின் அன்புச் சகோதரியும்,
கலா, தயா, நிதி, ராஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுந்தரலிங்கம், ஜெயக்குமார், தேவா, ராஜன், நாகேஸ்வரன், ஜெயந்தி, காலஞ்சென்ற விஷ்னு ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தங்கமணி அவர்களின் அன்பு மைத்துனியும்,
பாலா, ஜெயந்திராணி, மதன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
தனுசினி, நிசாந், நிவேதன், சுகனியா, பிரசாந், நவீன், றொசினா, றொஸ்சானா, நிரோஷன், கயன், அக்சியா, அபிஷா, ஒலிவியா, வினோபா, வேணிகா அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த அல்வாய் திக்கத்தில் 31/Jan/1948 இல் திரு.வல்லிபுரம் தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகளாய் வள்ளியம்மா அவர்கள் ஜெயவீரசிங்கம் எனும் உடன்பிறப்புடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் கணபதிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகன் திரு.தில்லைநடராஜா என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக கலா, தயா, நிதி, ராஜினி போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து சுந்தரலிங்கம், ஜெயக்குமார், தேவா, ராஜன், நாகேஸ்வரன், ஜெயந்தி, விஷ்ணு என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து தனுசினி, நிசாந், நிவேதன், சுகனியா, பிரசாந், நவீன், றொசினா, றொஸ்சானா, நிரோஷன், கயன், அக்சியா, அபிஷா, ஒலிவியா, வினோபா, வேணிகா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் உற்றார்,உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 22.07.2019 இல் 71 வயதில் கனடாவில் உள்ள Markham நகரத்தில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
அல்வாய் மண்ணின்
......அன்னை உறவே
இல்லாமை நீங்க
......உழைத்திட்ட உயிரே
சில்லறை போல்
...... சிரித்திட்ட மனமே
பலகாலம் வாழாது
....... பாதியில் பிரிந்தீரே
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

