மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தில்லையம்பலம் கணேஸ்வரன்
வயது 4810 பிப்ரவரி, 1971 – 10 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- Ravensburg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Ravensburg ஐ வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் கணேஸ்வரன் அவர்கள் 10-04-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குருநாதர் வள்ளியம்மை தம்பதிகள், விசுவலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
தில்லையம்பலம் செல்வராணி தம்பதிகளின் அன்பு மகனும், நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சதாசிவம் புனிதவதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தீபமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
தாரகா, லக்ஷியன், புராதனன், அட்சரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தயாபரன்(உதவி கல்விப்பணிப்பாளர்- யாழ்ப்பாணம்), மதிவதனன்(அதிபர் காரைநகர் யாழ்ரன் கல்லூரி), கருணாகரன்(சங்கீத பூஷணம்- கொழும்பு, ஆசிரியர்- றோயல் கல்லூரி), பஞ்சாநிதி(ஜேர்மனி), வள்ளிநிதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
வசந்தகுமாரி(ஆசிரியை- திருக்குடும்ப கன்னியர் மடம்), ஜெயசோதி(ஆசிரியை- வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி), புராதனி(கொழும்பு), பாஸ்கரன்(ஜேர்மனி), விஜயரூபன்(பிரான்ஸ்), மகேந்திரன்(இலங்கை), வனஜமலர்(ஜேர்மனி), ரவீந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற விஜயேந்திரன், மற்றும் சுகிர்தமலர்(இலங்கை), விஜயமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராதாகிருஷ்ணன்(ஜேர்மனி), யோகராணி(இலங்கை), அகிலாண்டேஸ்வரி(இலங்கை), ஜெகநாதன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கீர்த்திகா, ராகவன், ஹர்சன், காயத்திரி, அபிராமி, தசானன், நிதர்சன வருண், மதிசூதனன், அபிராமி, டினோசன், கிரிசாயினி, கிசாந்தி, காலஞ்சென்ற சிந்துஜா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
யதூசன், தனேசன், டெனிஷா, வைஷ்ணவி, சைந்தவி, லேகானந் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும், தீவுக்கூட்டங்களில் ஒன்றும் மிகத்தொன்மை மிகு நயினை நாகபூசணி அம்பாள் ஆலயம் அருள்பாலிக்கும் தீவும் வீட்டுத்தோட்டம், கால்நடை வளர்ப்புகள், கடலுணவு என்பன நிறைந்துள்ள நயினாதீவு 8ஆம் வட்டாரத்தில் 10-02-1971 இல் தில்லையம்பலம் செல்வராணி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் கணேஸ்வரன் அவர்கள் தயாபரன், மதிவதனன், கருணாகரன், பஞ்சாநிதி, வள்ளிநிதி ஆகிய சகோதரர்களுடன் இவ் அழகிய தீவில் அவதரித்தார்.
மேலும் ஆளுமையும் அறிவும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் நயினாதீவு 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சதாசிவம் புனிதவதி தம்பதிகளின் அழகு மகள் தீபமலர் அவர்களை திருமணம் முடித்து இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து தாரகா, லக்ஷியன், புராதனன், அட்சரன் எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன் நன்கு அறிவு நிறைந்தவரான சகோதரங்களுடன் சேர்ந்து படித்து உயர்நிலை அடைந்தார். வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்த இவர் பாசமாக உறவினர்களுடன் பேசி மகிழ்வதுடன் அனைவருக்கும் உதவிடும் எண்ணம் கொண்டவர்.
இவ்வாறு மனைவி பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 10-04-2019 இல் 48 வயதில் ஜேர்மனியில் உள்ள Ravensburg நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
"நயினை தீவின்
நற் புதல்வனே
நற்குணம் படைத்த
நல் முத்தே
நல்லதை நினைத்து
நற் பாதை காட்டி
நன்றி மறவாது வாழ்ந்து
நிலைத்தாய் மனங்களில்"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

