ஆறுதல்

நன்றி நவிலல்

திருஞானசம்பந்தர் பரங்கிரிநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

திருஞானசம்பந்தர் பரங்கிரிநாதன்

British Naval Base- Trincomalee , Government Surveyor Department- Colombo

வயது 9625 பிப்ரவரி, 1923 – 22 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
சங்குவேலி
வாழ்ந்த இடம்
திருகோணமலை, உரும்பிராய், இணுவில், கொழும்பு, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு "

எமது அன்புத் தெய்வம் இறையடி எய்திய செய்தி கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோர்கள், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்க்கும், உற்றார், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சங்குவேலியில் புகழ் பூத்த சீமான் திரு.திருஞானசம்பந்தர் அவர்தம் பாரியார் தெய்வானைப்பிள்ளை அவர்களின் அருமைப் புத்திரனாக 25/FEB/1923 ஆம் ஆண்டில் திரு.பரங்கிரிநாதன் அவர்கள் நேசமணி இராஜதுரை எனும் உடன்பிறப்புடன் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் நன்கு படித்து உயர்நிலை அடைந்த இவர் திரு.திருமதி முத்துக்குமாரு பானுமதி தம்பதிகளின் அன்பு மகளான உரும்பிராய் சைவத் தமிழ் வைத்தியசாலை அதிபரான சகுந்தலா அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக கிரிதரன், சிவதரன், கௌசலை போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்ந்து எலிசபெத்,ஐலஜா,தவரட்ணம் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து ஜோநாதன், கற்றீனா, கவின், கர்ஷா, சகாப்தன் எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் நன்கு படித்த இவர் British Naval Base - Trincomalee,Government Surveyor Department - Colombo போன்றவற்றில் சேவையாற்றி ஓய்வு பெற்ற இவர் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர் நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 22.08.2019 இல் 96 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

சந்தண மேனியே .......... சங்குவேலி உயிரே
சிங்க மனிதரே......... சிந்தனை உறவே
உங்கள் சேவை......... உயரிய சேவை
அங்கம் பாராது......... அல்லும் பகலும் உழைத்த
சங்க மனிதரே......... சரித்திர புரிசரே
எங்கே போனீர்......... எமை விட்டு

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.