ஆறுதல்

3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருமகள் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

திருமகள் கிருஷ்ணமூர்த்தி

பழைய மாணவி- யாழ் இந்து மகளிர் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி

வயது 795 ஜனவரி, 1940 – 7 ஜூலை, 2019

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
காரைநகர், நல்லூர், Toronto

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காரைநகர் சடையாளி, நல்லூர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமகள் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
அம்மா மூன்று ஆண்டுகள்
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!

எத்தனைஉறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!

உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள்
எல்லாம் பொற் காலங்கள் தான்!

அம்மா உங்களதுஅன்பான அரவணைப்பு,
இனிமையான பேச்சு, பழக்கவழக்கங்கள்,
நேர்மை, எல்லோருடனும் பழகும் தன்மை
இவைகளால் எல்லோராலும்
போற்றப்பட்டீர்கள் மதிக்கப்பட்டீர்கள்!

உங்கள் உடல் மட்டும் தான்
பிரிந்து போனது ஆனால்
முழு நினைவாக உயிர்
எம்முடன் தான் இருக்குதம்மா

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகின்றோம்...

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

தென் கிழக்காசியாவில் முக்கியமான நாடும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ளதும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வலயமாக விளங்கும் பகுதியில் சிறப்பும் சகல வளங்களைக் கொண்டதுமான மலேசியாவில் 05/Jan/1940 ஆம் ஆண்டு அருளையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளாக திருமகள் அவர்கள் இராசலட்சுமி, ஜெயமணி, சிவனேஸ்வரன், அருட்சோதி, ரோகினி, ரேவதி போன்றவர்களின் சகோதரியாக இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவரானதும் இரத்தினசிங்கம் நேசம்மா தம்பதிகளின் அன்பு மகன் சிரேஷ்ட சுகாதார பரிசோதகர் கிருஷ்ணமூர்த்தி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து உதயகுமார், ஜெயந்தகுமார், சுரேந்திரகுமார் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சந்திரமலர், காயத்திரி, கருணாவதி போன்றவர்களை பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் முடித்து வைத்து பிருந்தா, சாரங்கா, அபிஷா, பிரதீஸ் போன்ற பேரப்பிள்ளைகளுடனும், அஸ்வின் என்ற பூட்டப்பிள்ளையுடனும் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் நல்லூர்,காரைநகர் போன்றவற்றில் வாழ்ந்ததுடன் யாழ்.இந்து மகளிர் கல்லூரி,காரைநகர் இந்துக் கல்லூரி போன்றவற்றின் பழைய மாணவியான இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார்.அத்துடன் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கியதுடன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 07.07.2019 இல் 79 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

மலேசியா தந்த மகத்துவ உள்ளமே
மனித குலத்தின் உயரிய பொக்கிஷமே
பணி செய்து மகிழ்ந்த உறவே
பாசம் கொண்ட நேச மனமே
கானம் பாடி தூங்க வைப்பீர்
இனி உமை எப்போ காண்போம்

பிற அறிவித்தல்கள்

  1. 11 ஜூலை, 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 7 ஆகஸ்ட், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →
  3. ஆண்டு நினைவஞ்சலி · 28 அக்டோபர், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.