மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
திருச்செல்வரட்ணம் ஞானப்பிரகாசம்
வயது 8715 ஆகஸ்ட், 1932 – 20 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- இளவாலை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருச்செல்வரட்ணம் ஞானப்பிரகாசம் அவர்கள் 20-11-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான யோசேப்பு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேரி கொண்செப்ரா(றூபி) அவர்களின் அருமைக் கணவரும்,
சித்திரா, சுபத்திரா, சேளி, சிறான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
எட்மண்ட், ஜெபநேசன், ஜெயராஜ், ஆனந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
எட்பின் ஜோசப், காலஞ்சென்ற அல்போன்சஸ், சின்னமலர் தெரசா, வில்பிரட், ஜோசபின், ஹாமில்டன், டெய்ஸி, பட்ரிக், பிலிப், ஜெயம், நெஸ்ஸி, ராஜி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஷிரோமி, எரிக், மிஷேல், டியனா, பெர்டினா, ஜெனா, ஜேசன், ஸ்டேபான், ஜெசிக்கா, சாமுவேல் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் கல்வியறிவு கூடிய சமுதாயமாக விளங்கும் இளவாலையில் 15/AUG/1932 ஆம் ஆண்டில் திரு.திருமதி ஞானப்பிரகாசம் அன்னம்மா தம்பதிகளுக்கு அழகு மகனாக திரு.திருச்செல்வரட்ணம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் எட்பின் ஜோசப், அல்போன்சஸ், சின்னமலர் தெரசா, வில்பிரட், ஜோசபின், ஹாமில்டன், டெய்ஸி, பட்ரிக், பிலிப், ஜெயம், நெஸ்ஸி, ராஜி போன்ற சகோதரங்களுடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி யோசேப்பு அன்னம்மா போன்றோரின் அழகிய பெண்ணான மேரி கொண்செப்ரா(றூபி) என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து வந்தனர்.
முழுக் கதையையும் வாசிக்க
இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வந்ததன் பயனாக சித்திரா, சுபத்திரா, சேளி, சிறான் எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று வளர்த்து பெரியவர்களானதும் எட்மண்ட், ஜெபநேசன், ஜெயராஜ், ஆனந்தினி என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து ஷிரோமி, எரிக், மிஷேல், டியனா, பெர்டினா, ஜெனா, ஜேசன், ஸ்டேபான், ஜெசிக்கா, சாமுவேல் எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் A.K.A Nepoleon என அழைக்கப்படும் இவர் கடின உழைப்பாளியும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,உற்றார், உறவினர், என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 20.11.2019 இல் 87 வயதில் கனடாவில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்
இளவாலை மண்ணின் இதய தெய்வமே
வளமாக எங்களை வளர்த்த உள்ளமே
உளநலம் சிறப்புற்று உதய சூரியனாகி
களங்கம் அற்ற மனமுடன் வாழ்ந்து
கலங்க வைத்துச் சென்றீரே எங்கள்
கருணை உறவே கரும்பே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

