1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
திவாகர் றஜீவ்
வயது 2612 ஆகஸ்ட், 1994 – 16 ஆகஸ்ட், 2020
- பிறந்த இடம்
- Toronto
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககனடா Toronto வை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த திவாகர் றஜீவ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் மகனே எங்கு சென்றாய்?என்னை விட்டு எங்கு சென்றாய்?நான் உண்பதுவும் உடுப்பதுவும் உனக்காய் அன்றோ!வீட்டில் இருப்பதும் சமைப்பதுவும் உனக்காய் அன்றோ!உயிர் கொண்டு வாழ்வதுவே, உனக்காய் அன்றோ!என்னை விட்டு எங்கு சென்றாய் எம் மகனே!
அம்மா சாப்பிட்டீங்களா என்றுஉண்ணும் முன் எப்போதும் கேட்ப்பாயேஇனி என்னை யார் கேட்ப்பார்?என் கண்ணில் நீர்வழிய ஒரு போதும் நீ விட்டதில்லைஅழாதே அம்மா என்று எப்போதும் சொல்வாயே....
இன்று என் கண்ணீர் ஆறாய் ஓடுதய்யாஉன் அறையை பார்க்கின்றேன் எழுந்துவந்துஆறுதல் கூறாயோ என் மகனே?உனக்காகவே வாழ்கிறேன் என்றறிந்துஎனக்காகவே வாழ்ந்த தெய்வமே
உன் இன்முகம் ஒருமுறை காட்டாயோ?என் முகம் பார்த்து ஒருமுறை உன் அந்தஅழகிய புன்சிரிப்பை உதிராயோ?அம்மா.. அம்மா என்று ஒருமுறைவாய்நிறைய அழைக்காயோ என் மகனே?
என்றும் என்னுடனே வாழும் ஜீவன்என் நித்திய ஜீவன் நீயேஎன்றென்றும் என்னுடனே கூட இரு மகனேஎன்றென்றும் என்ஜீவனில் கலந்திரு மகனேஎன் சுவாசக் காற்றே நீ தானய்யா!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

