ஆறுதல்

மரண அறிவித்தல்

தியாகலிங்கம் கந்தையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தியாகலிங்கம் கந்தையா

வயது 8015 ஜனவரி, 1939 – 14 அக்டோபர், 2019

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
மெல்போன்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாய் சோதிவேம்படியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட Dr. தியாகலிங்கம் கந்தையா அவர்கள் 14-10-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருவிளங்கம் இரத்தினமலர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரவதனா அவர்களின் அன்புக் கணவரும்,

ராதிக்கா, தாரிணி, ரமேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உமா அவர்களின் அன்பு மாமனாரும்,

கைலாஷ், இஷானா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

Melbourne Delahey ஐச் சேர்ந்தவர்களான புனிதவதி, காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பத்மநாதன், Temple Stow ஐச் சேர்ந்த அமிர்தவதனா மகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாணத்தின் மானிப்பாயில் 15/JAN/1939 ஆம் ஆண்டில் திரு.திருமதி கந்தையா நல்லம்மா தம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.தியாகலிங்கம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் புனிதவதி, சோமசுந்தரம், தர்மலிங்கம் எனும் உடன்பிறப்புடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி திருவிளங்கம் இரத்தினமலர் தம்பதிகளின் அன்பு மகளான சந்திரவதனா என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தனர்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர்கள் இருவரின் வாழ்க்கையின் பயனாக ராதிக்கா, தாரிணி, ரமேஸ் எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து உமா என்பவரை திருமணம் முடித்து வைத்து கைலாஷ், இஷானா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் நன்றாக கல்வி பயின்ற இவர் வைத்தியராக பல இடங்களில், வறிய மக்களுக்காக அற்பணிப்புடன் சேவையாற்றி ஓய்வு பெற்றதுடன் கடின உழைப்பாளியும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 14.10.2019 இல் 80 வயதில் அவுஸ்திரேலியாவில் உள்ள Melbourne நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.