மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தியாகராஜா கிருஷ்ணசாமி
கட்டட பட வரைஞர், யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர் மற்றும் 1955ம் ஆண்டு கிரிக்கட் அணியின் தலைவர்
வயது 841 செப்டம்பர், 1934 – 17 ஜூன், 2019
- பிறந்த இடம்
- நீராவியடி
- வாழ்ந்த இடம்
- சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா கிருஷ்ணசாமி அவர்கள் 17-06-2019 திங்கட்கிழமை அன்று Sydney இல் காலமானார்.
அன்னார், மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
கோபிநாத்(Sydney), பிரேம்நாத்(கனடா), விஸ்வநாத்(லண்டன்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
மதிமளா(அவுஸ்திரேலியா), கீதா(கனடா), பானுரேகா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அரிநாத், ரூபீந்திரநாத், சகீத்நாத், பிரநாத், பவுநாத், கிருஷ்நாத் ஆகியோரின் ஆசைப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான மனோன்மணி, பாலசிங்கம், மற்றும் மயில்வாகனம்(கொழும்பு), காலஞ்சென்ற செல்வராஜா, புனிதா(கொழும்பு), கந்தசாமி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் நீராவியடியில் 01/SEP/1934 இல் திரு.தியாகராஜா கிருஷ்ணசாமி அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மனோன்மணி, பாலசிங்கம், மயில்வாகனம், செல்வராஜா, புனிதா, கந்தசாமி போன்ற உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் மனோன்மணி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து கோபிநாத், பிரேம்நாத், விஸ்வநாத் எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று பண்பாக வளர்த்து மதிமளா, கீதா, பானுரேகா என்பவருக்குத் திருமணம் முடித்து வைத்து அரிநாத், ரூபீந்திரநாத், சகீத்நாத், பிரநாத், பவுநாத், கிருஷ்நாத் எனும் அழகுப் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் வீரர் என அனைவராலும் அழைக்கப்படும் இவர் யாழ்.இந்துக் கல்லூரி பழைய மாணவரும்,1955ஆம் ஆண்டு கிரிக்கெட் அணியின் தலைவராகவும் இருந்ததுடன் கட்டட படவரைஞராக விளங்கியதுடன், கடின உழைப்பாளியும் கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 17.06.2019 இல் 84 வயதில் அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
படகலை வீரன் படிப்பில் சூரன்
கட கடவென பேசும் காவல் வீரன்
இந்துவின் மைந்தன் பந்துடன் திரிபவர்
வெந்தனல் கண்ணன் விளையாட்டு வீரன்
சாதனை பல உலகிற்குக் காட்டி
சரித்திரம் படைந்து பிரிந்து சென்றீரே
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

