ஆறுதல்

மரண அறிவித்தல்

தியைரூபன் சுந்தரலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

தியைரூபன் சுந்தரலிங்கம்

வயது 5623 டிசம்பர், 1962 – 4 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
மல்லாகம்
வாழ்ந்த இடம்
ஜேர்மனி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட தியைரூபன் சுந்தரலிங்கம் அவர்கள் 04-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சுபத்திரா தம்பதிகளின் அன்பு மகனும், சிவசம்பு, காலஞ்சென்ற செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சம்ஜா, தனுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுந்தரேஸ்வரி, ஜெயக்குமாரி, சுகந்தன், ஜெயசுதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-09-2019 புதன்கிழமை அன்று மு.ப 08: 00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை Friedhofstraße 31, 76646 Bruchsal, Germany எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் மல்லாகத்தில் 23/DEC/1962 இல் திரு.திருமதி சுந்தரலிங்கம் சுபத்திரா தம்பதிகளின் அன்பு மகனாக திரு.தியைரூபன் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சுந்தரேஸ்வரி, ஜெயக்குமாரி, சுகந்தன், ஜெயசுதா எனும் சகோதரர்களுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், திரு.திருமதி சிவசம்பு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகள் மலர் எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து சம்ஜா,தனுஷன் எனும் அழகிய பிள்ளையைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் கொண்ட இவர் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டு விளங்கினார்.

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 04.09.2019 இல் 56 வயதில் ஜேர்மனியில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

"மல்லாகம் தந்த மாசற்ற
குல விளக்கே
சொல்லில் சிறந்த
சொந்த உறவே
பல் வார்த்தை
பக்குவமாய் பேசிவில்
அம்பு போல்
விரைந்து சென்று
கல் மனங்களை
கரைய வைத்து
கண்ணீர் மழை
சிந்த வைத்தீரே"

பிற அறிவித்தல்கள்

  1. 3 அக்டோபர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.