மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
தோமஸ்பிள்ளை ஜெரோம்
வயது 8320 ஜூலை, 1936 – 14 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- அச்சுவேலி
- வாழ்ந்த இடம்
- மட்டக்குளி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மட்டக்குளியை வதிவிடமாகவும் கொண்ட தோமஸ்பிள்ளை ஜெரோம் அவர்கள் 14-11-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார். காலஞ்சென்ற திரு. திருமதி தோமஸ்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி கிறகரி சுவாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற மேரி றீற்றா அவர்களின் அன்பு கணவரும்,
அன்ரன், ஜேம்ஸ், யூஜினா, மோகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ராணி, மணி, துரைசிங்கம், வின்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
டோன், ஷாமா, மொகான், ஐரா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ஜெனவ், மொகான், ஜேட், ராயென், சொகான், ஷைலோ, ஷேவோன், ஜொயானா, லக்ஷா, கெவின் ஆகியோரின் பாசமிகு பாட்டனும்,
ஜேக்சன், கெய்லி, ஷாலோட்த் ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 16-11-2019 சனிக்கிழமை அன்று பி.ப 03:00 மணிமுதல் 17-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணிவரை வத்தளை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மாதம்பிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தில் புகழ் பூத்த சீமான் திரு. தோம்ஸ்பிள்ளை அவர்தம் தம்பதிகள் அவர்களின் அருமைப் புத்திரனாக 20/JUL/1936 ஆம் ஆண்டில் திரு.ஜெரோம் அவர்கள் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.
அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடனும் ராணி, மணி, துரைசிங்கம், வின்சன் போன்ற உடன் பிறப்புகளுடனும் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டதுடன் திரு.திருமதி கிறகரி சுவாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு நிறைந்த மகள் மேரி றீற்றா அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இருவரின் நல் வாழ்க்கையின் பயனாக அன்ரன், ஜேம்ஸ், யூஜினா, மோகன் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து டோன், ஷாமா, மொகான், ஐரா என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து ஜெனவ், மொகான், ஜேட், ராயென், சொகான், ஷைலோ, ஷேவோன், ஜொயானா, லக்ஷா, கெவின் எனும் பேரப்பிள்ளைகளுடனும் ஜேக்சன், கெய்லி, ஷாலோட்த் எனும் பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் அன்பும் பண்பும் கொண்ட இவர் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கினார் அத்துடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார்,
இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 14.11.2019 இல் 83 வயதில் கொழும்பில் உள்ள மட்டக்குளியில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
அச்சுவேலி தந்த அருமை உறவே
புன்னகை மொழி பேசும் உயிரே
கண்ணாடி வதனமும் கருணை மனமும்
என்னாலும் மாறாத எமது உள்ளமே
அண்ணலே ஆருயிர் வள்ளலே
போனீரே பிரிந்து கண்ணீர் வடிக்கிறோம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

