ஆறுதல்

மரண அறிவித்தல்

துரையப்பா சிவசுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

துரையப்பா சிவசுப்பிரமணியம்

இளைப்பாறிய பொறியியலாளர், நீர்ப்பாசன இலாகா- இலங்கை

வயது 9228 செப்டம்பர், 1926 – 21 ஜூன், 2019

பிறந்த இடம்
கொட்டடி
வாழ்ந்த இடம்
சிட்னி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட துரையப்பா சிவசுப்பிரமணியம் அவர்கள் 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று Sydney இல் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற துரையப்பா, சிவகாமி தம்பதிகளின் இளைய மகனும்,

மனோன்மணி(உரும்பிராய்) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவானி, ஈஸ்வரன், நந்தினி, முரளினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான துரைராஜா, கனகராஜா, சரஸ்வதி, சிவசிதம்பரம், நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நரேந்திரன், ஞானகலா, ஜெயலிங்கம், சிறீதர் ஆகியோரின் அருமை மாமனாரும்,

சஞ்சீவன், தர்ஷி, தமிழினி, மீரா, சீதா, நித்திலா, சயந்தினி, கிருஷாந்த், மாதுரி, பிரியங்கா, மாறன் ஆகியோரின் அன்புப் பாட்டனும்,

அஞ்சலி அவர்களின் ஆசைப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்ததுள்ள யாழ்ப்பாணத்தின் கொட்டடியில் புகழ் பூத்த சீமான் திரு.துரையப்பா அவர்தம் பாரியார் திருமதி சிவகாமி அவர்களின் அருமைப் புத்திரனாக 28/SEP/1926 ஆம் ஆண்டில் திரு.சிவசுப்பிரமணியம் அவர்கள் இவ் அழகிய பூமியில் துரைராஜா, கனகராஜா, சரஸ்வதி, சிவசிதம்பரம், நாகேஸ்வரி போன்றவர்களின் பாசமிகு சகோதரனாக அவதரித்தார்.

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடனும் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டதுடன், உரும்பிராய் மனோன்மணி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றிக் கொண்டார். இனிமையான இவர்களின் இல்லறவாழ்வின் பயனாக சிவானி, ஈஸ்வரன், நந்தினி, முரளினி போன்ற நற் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து நரேந்திரன், ஞானகலா, ஜெயலிங்கம், சிறீதர் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து பேரப்பிள்ளைகளுடனும் ஆசைப் பூட்டப்பிள்ளையுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் மணியம் என அனைவராலும் பாசமாக அழைக்கப்படும் இவர் இலங்கை நீர்ப்பாசன இலாகா பொறியியலாளராக கடமையாற்றி இளைப்பாறியதுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் சகோதரபாசம் நிறைந்தும், பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 21.06.2019 இல் 92 வயதில் அவுஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் இறைபதம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

”கொட்டடி மண்ணின்
......குல விளக்கே
எட்டி நடந்து
......நன்மைகள் செய்த
வட்ட வடிவான
.....வதன அழகுடன்
விம்மி அழ வைத்து
.....விடைபெற்றீரே”

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.