நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைராசா ஜெகதீசன்
வயது 398 பிப்ரவரி, 1980 – 25 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- வண்ணார்பண்ணை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வண்ணார்பண்ணை பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட துரைராசா ஜெகதீசன் அவர்களின் அந்தியேட்டி, வீட்டுக்கிருத்திய அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மறைவுச் செய்தி அறிந்தவுடன் உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் உடனடியாக எம்மில்லம் நாடி ஓடி வந்து வேண்டிய உதவிகள் செய்த உறவினர்கள், அயலவர்கள், நண்பர்கள் ஆகியோருக்கும், துக்கம் விசாரித்தவர்களுக்கும், வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இருந்து தொலைபேசி மூலமும், மின்னஞ்சல் மூலமும் அனுதாபங்கள் தெரிவித்தவர்களுக்கும், மரணச்சடங்கு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், மலர்வளையங்கள் வைத்து சாந்தி அஞ்சலி செலுத்தியவர்கள் இன்னும் ஏனைய நெஞ்சங்கட்கும் எமது இதய பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
அந்தியேட்டிக் கிரியை 23-10-2019 புதன்கிழமை அன்று காலை 07:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக்கரையிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 25-10-2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 10:00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தொடர்ந்து 12:00 மணியளவில் வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் கல்யாண மண்டபத்திலும்(கே.கே.எஸ் வீதி, நாச்சிமார் கோவில்) நடைபெற இருக்கின்றது.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
வாழ்வில் நற்பண்பும், ஒழுக்கமும் நிறைந்த துரைராசா ஜெகதீசன் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...
ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் கல்வியறிவு கூடிய சமுதாயமாக விளங்கும் வண்ணார்பண்ணையில் 08/FEB/1980 ஆம் ஆண்டில் துரைராசா புஸ்பராணி தம்பதிகளுக்கு அருமை மகனாக ஜெகதீசன் அவர்கள் பிறந்தார். சிவகரன், பிரியவதனி, மதிவதனி போன்ற சகோதரங்களுடன் ஓடி ஆடி விளையாடி குறும்புகள் செய்து இனிமையாக வளர்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
பள்ளிப்படிப்பை முடித்தவுடன் குடும்ப சூழல் கருதி வேலைக்குச் செல்ல முடிவெடுத்த இவர் மின் அலங்கார வேலையை செய்யத் தொடங்கினார். பிறகு வாகன மெக்கனிக்காக பணி செய்யத் தொடங்கிய இவர், அயல்நாடுகளுக்குச் சென்று அதே வேலையை அங்கும் பார்க்கத் தொடங்கினார்.
2010ஆம் ஆண்டு குணபாலசிங்கம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகள் ஜெயந்தா என்பவரைத் திருமணம் முடித்து, மறுபடியும் இலங்கையிலேயே வேலை பார்க்கத் தொடங்கிய இவர், இல்லற வாழ்வை இனிமையாக வாழ்ந்ததன் பயனாக கபிலன், கரணிகா எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்தார்.
தனது குலதெய்வமான காளிகோவில் நிர்வாக உறுப்பினராக அதன் நிர்பாலனத்திற்கு கடும் பாடுபட்டு உழைத்த இவர் அன்புள்ளம் கொண்டு உதவிகள் புரிவதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும், பாடல்களை கேட்பட்தை தனது பொழுதுபோக்காகவும் கொண்டிருந்தார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 25.09.2019 இல் 39 வயதில் வண்ணார்பண்ணையில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
”சமூகப் பணியின் நாயகனே
சந்தண மனம் கொண்டு வாழ்ந்து
இளமை வயதில் எமைப் பிரிந்தீர்
இயம்பி அழுகிறோம் இங்கே நாம்
முத்தாய் சிதறிய சொத்தே
வித்தாய் முளைப்பீர் விரைவில்”
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

