மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைராஜா தனபாலசிங்கம்
வயது 681 மார்ச், 1951 – 2 ஜூன், 2019
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- Duisburg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா தனபாலசிங்கம் அவர்கள் 02-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராஜா பூங்கோதை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
கோபிநாத், அபிராமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கமலாதேவி(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குமாரசுவாமி, சிவலிங்கம் செல்வராணி(இலங்கை), ஜேயேந்திரம் ஜெயலட்சுமி(பிரான்ஸ்), விஜயலட்சுமி(இலங்கை), காலஞ்சென்ற ராஜகுமாரி, வரதராஜன் கலாமதி(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரபாகர் வரிதினி(காயத்திரி), சுஜாதா சுதாகர், சுதா, செந்தூரன், தர்மிலா, துஸ்ஜேந்தர், வைஷ்ணவி, கபிலன், ராகவி, சாம்பவி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திஷோபா, அஸ்வின், பிரியதர்சன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
றஜிதா யாள, பபிதா ஓலாவ் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
அவனிகா, அர்த்தனா, அருமிகா, சபி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த அரியாலையில் துரைராஜா பூங்கோதை தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக தனபாலசிங்கம் அவர்கள் 01/MAR/1951 இல் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் கமலாதேவி ஆகிய உடன் பிறப்புடன் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் நாகலிங்கம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகள் தனலட்சுமி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து கோபிநாத், அபிராமி போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன், பெரியவர்கள் ஆனதும் திருமணம் முடித்து வைத்து அவனிகா, அர்த்தனா, அருமிகா, சபி போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இவர் எப்போதும் அன்பு முகத்துடனும், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 02.06.2019 இல் 68 வயதில் ஜேர்மனியில் உள்ள Duisburg நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
அரியாலை மண்ணின்
......அற்புத பிறப்பே
எரிகணல் பார்வையாய்
.......ஏற்றம் கண்டவனே
பரிவு மனம் கொண்டு
.......பாரினில் வாழ்ந்து
பிரிந்தாயே எமைவிட்டு
........போனீரே தூரம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

