மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
துரைராசா இராசக்குமரன்
வயது 3816 நவம்பர், 1981 – 13 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- இடைக்குறிச்சி
- வாழ்ந்த இடம்
- நோர்வே
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இடைக்குறிச்சி வரணியைப் பிறப்பிடமாகவும், நோர்வே Forde, Oslo ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட துரைராசா இராசக்குமரன் அவர்கள் 13-01-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், முன்னாள் சாவகச்சேரி பிரதேசபையின் தவிசாளரும், ஓய்வு பெற்ற வரணிக் கொத்தணி அதிபர் துரைராசா உமாமகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், தேவகுமார் இரத்தினசோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரஜீந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
மியூனா அவர்களின் பாசமிகு தந்தையும்,
திருக்குமார், செந்தில்குமரன், சியாமளா, இளங்குமரன், குன்றக்குமரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிறீரஞ்சினி, கெளசலை, தாமோதரன், மேகலா, மதிவதனி, றஜீனா, வாகீசன், றஜீபன், சுதேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காண்டீபன், சேயோன், முகுந்தன், கயேந்திரன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

