ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

துரைச்சாமி சாம்பசிவம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

துரைச்சாமி சாம்பசிவம்

வயது 6811 மார்ச், 1951 – 13 ஜூன், 2019

பிறந்த இடம்
நயினாதீவு
வாழ்ந்த இடம்
Minden, Rheinfelden (Baden)

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Minden, Rheinfelden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைச்சாமி சாம்பசிவம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

இறைவனின் படைப்பில் பிறப்பும் இறப்பும்
இயல்பான விதியென்பதை நாம் உணர்ந்திட்ட போதும்,
ஆனைவரிடத்திலும் இன்முகம் காட்டி
அன்பும் அரவணைப்பும் கூட்டி
பிள்ளைகளை கல்வியில் மேம்பட வைத்து
வாழ்கைப் பெருங்கடலில் எமக்கு
வளமான வாழ்கை அமைத்துத் தந்த அப்பாவே....

ஆறாத் துயரில் எமை ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்டு இன்று,
ஆண்டு ஒன்று ஆனபோதும்
அனுதினமும் நீங்கள் அசைந்து திரிந்த
இடமெங்கும் உங்கள் திருமுகம் தோன்றுதிங்கே

மாண்டோர் மீண்டும் வருவாரோ மானிடத்தில்
எனும் வாக்குப் பொய்குமானால் மகிழ்வோம் நாம்.
அன்பை நிறைத்து அரவணைத்து
முத்தம் சொரிந்த பேரப்பிள்ளைகள், தாத்தா தாத்தா என்று
தினமும் புலம்பும் புலம்பல்கள் கேட்கிறதா.

ஆண்டுகள் பலவானாலும் என்றென்றும்
எங்கள் இதயக்கூட்டில் உங்கள்
நினைவுகளைச் சுமந்திருக்கும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், இதிகாச காலத் தொன்மை கொண்ட நயினை நாகபூசனி அம்மன் அருள்பாலிக்கும் தீவும், கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு, பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த நயினாதீவு 4ஆம் வட்டாரத்தில் 11/Mar/1951 ஆம் ஆண்டில் திரு.திருமதி துரைச்சாமி செல்லமுத்து தம்பதிகளுக்கு அன்பு மகனாக திரு.சாம்பசிவம் அவர்கள் தருமலிங்கம்,சிவபாக்கியம் போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அழகு நிறைந்த இவர் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன் திரு.திருமதி சரவணமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளான நாகேஸ்வரி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து விஜயகாந்த்,நிலாந்தி எனும் அருமையான பிள்ளையைப் பெற்று வளர்த்து சகுந்தலா ஜசிந்தன் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து சாஜலா, ஹரிதன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கியதுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராக விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 13.06.2019 இல் 68 வயதில் ஜேர்மனியில் Rheinfelden நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

”நயினையில் வந்து திர்த்த
நாதனே
பாசம் கொண்ட பண்பு
உள்ளமே
பாயும் புலி போல்
பகைவர்
நடுநடுங்க வாழ்ந்து
புகழ் பரப்பி வீழ்ந்தீரே”

பிற அறிவித்தல்கள்

  1. 15 ஜூன், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.