ஆறுதல்

மரண அறிவித்தல்

துரையப்பா கருணானந்தராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

துரையப்பா கருணானந்தராஜா

வயது 7115 செப்டம்பர், 1947 – 17 மே, 2019

பிறந்த இடம்
ஏழாலை
வாழ்ந்த இடம்
மாதகல், Markham

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஏழாலை தெற்கு மயிலங்காட்டைப் பிறப்பிடமாகவும், மாதகல் அந்தோணியார் கோவில் வீதி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரையப்பா கருணானந்தராஜா அவர்கள் 17-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரையப்பா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வீரசிங்கம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகேஸ்வரிதேவி(தேவி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுதர்சன்(சுதன்), சண்டிகா, ஜனார்த்தனன்(ஜனா) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

சதீசன், லக்‌ஷிகா, சுகன்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, ஞானலிங்கம் மற்றும் செல்வராசா, துரைராசா, அருந்தவமலர், மனோரஞ்சிதமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான துரைராசா, சிவானந்தன், நவஜீவராஜா, பேரின்பநாதன், கைலாசபதி, தர்மேந்திரன், பவானந்தன் மற்றும் கோபாலசிங்கம்- சந்திராதேவி, சறோஜாதேவி, சோமசேகரம்- நிறஞ்சலா, லிங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரதி, சயன், அனிகா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும், நெல்வயல்கள்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த ஏழாலை மேற்கு மயிலங்காட்டில்15/SEP/1947 ஆம் ஆண்டு துரையப்பா இராசம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக கருணானந்தராஜா அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் பிறந்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் நாகேஸ்வரி, ஞானலிங்கம், செல்வராசா, துரைராசா, அருந்தவமலர், மனோரஞ்சிதமலர் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் வீரசிங்கம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகள் நாகேஸ்வரி என்பவரைத் திருமணம் செய்து இன்பமாக வாழ்ந்து சுதர்சன்,சண்டிகா,ஜனார்த்தனன் போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்ததுடன் சதீசன், லக்‌ஷிகா, சுகன்யா போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து தனது மாமாவிற்குரிய கடமையை சிறப்பாக செய்து ஆரதி,சயன்,அனிகா ஆகிய அற்புத பிள்ளைகளின் பேரனாக கடமை செய்து இன்பமாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் வெள்ளையர் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், சகோதரபாசம் நிறைந்தும், பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார் இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 17.05.2019 இல் 71 வயதில் கனடாவில் உள்ள Markham இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

ஏழாலை மண்ணின்
......எழு கதிரே
எப்போதும் உழைத்து
.......ஏற்றம் கண்ட
எங்கள் உறவே
........ அன்பு உள்ளமே
எங்கே சென்றீர்
......எமை விட்டு

பிற அறிவித்தல்கள்

  1. 18 ஜூன், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.