மரண அறிவித்தல்

துஷ்யந்தன் ஆனந்தகுமாரி
வயது 37
பிறந்த இடம்: சுழிபுரம்வாழ்ந்த இடம்: பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுழிபுரம் பறாளாய் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட துஷ்யந்தன் ஆனந்தகுமாரி அவர்கள் 24-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்து, அன்னப்பிள்ளை தம்பதிகள், மயில்வாகனம் சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற சுந்தரலிங்கம், புஷ்பகாந்தி தம்பதிகளின் அருமை மகளும், சிவபாலன் ஜெயலட்சுமி தம்பதிகளின் மருமகளும்,
துஷ்யந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
சயானா, கஜானன், சஞ்சய் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாந்தகுமாரி, ராஜ்குமார், ரூபகுமாரி, பாலகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சயந்தன், இரவிக்குமார், சசிதரன், லாவண்யா வளர்மதி ஆகியோரின் மைத்துனியும்,
செல்வராசா அவர்களின் அன்பு மருமகளும்,
ராமச்சந்திரன், பிரேமகாந்தி, உலகநாதன், விமலகாந்தி ஆகியோரின் ஆசைப் பெறாமகளும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
நெல் வயலும், நீண்டு வளர்ந்த பனைமரமும் செடிகளையும் சூழ்ந்த அழகுதரும் கிராமமாய் காட்சிதரும் சுழிபுரம் என்னும் ஊரில் சுந்தரலிங்கம் புஷ்பகாந்தி தம்பதிகளுக்கு அழகு மகளாக ஆனந்தகுமாரி அவனியிலே வந்துதித்தார்.
சாந்தகுமாரி, ராஜ்குமார், ரூபகுமாரி, பாலகுமார் ஆகிய பாசமிகு சகோதரர்களுடன் தன் சிறுவயதினில் இனிமையாக வாழ்ந்தார். அமுதா அமுதா என அன்பாக அழைத்த பெற்றோர் சிறந்த கல்வியினை வழங்கினர்,
முழுக் கதையையும் வாசிக்க
பெரியவளாக வளர்ந்த அமுதாக்கு நல்ல வரன் தேடினர், தேடுதலின் பலனாக சிவபாலன் ஜெயலட்சுமி தம்பதிகளின் மகனான துஷ்யந்தன் அவர்களை திருமணம் முடித்து வைத்தனர்.
இல்லறம் நல்லறமாக நடைபோடும் போது குலம் தழைக்கவும் கொஞ்சி மகிழவும் சயானா,கஜானன்,சஞ்சய் எனும் அன்புப் பிள்ளைகளை பெற்றெடுத்தார்.
குழந்தைகளே உலகமாக வாழ்ந்த இவர் 24.2.2019இல் 37 வயதில் பிரான்சில் இறையடி சேர்ந்தார்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

