மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
உமா துரைராஜரட்ணம்
ஆசிரியை- சண்முகானந்த மகளிர் கல்லூரி, திருகோணமலை
வயது 4826 அக்டோபர், 1970 – 10 ஜூன், 2019
- பிறந்த இடம்
- ஈச்சமோட்டை
- வாழ்ந்த இடம்
- திருகோணமலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட உமா துரைராஜரட்ணம் அவர்கள் 10-06-2019 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமாரசுவாமி கமலம்(கொழும்பு சின்னையாபிள்ளை அன்சன்ஸ்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் வாசுகிஅம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
மகாலச்சுமி அவர்களின் வளர்ப்பு மகளும்,
துரைராஜரட்ணம்(ஆசிரியர்- சென்மேரிஸ் மகளிர் கல்லூரி, திருகோணமலை) அவர்களின் அன்பு மனைவியும்,
சரண்யா, சாம்சுகேஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கௌரி(கனடா), ஆனந்தி(கனடா), பகீரதன்(மோகன்- கனடா), துளசிதரன்(துளசி-கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ராஜ்குமார், பாலேந்திரா, தயாநிதி, மதினிக்கா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 12-06-2019 புதன்கிழமை அன்று திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு 13-06-2019 வியாழக்கிழமை அன்று பி.ப. 03:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் திருகோணமலை நகரசபை பொது மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான, யாழ்ப்பாணத்தில் அருகில் உள்ளதும் மக்கள் செறிந்து வாழும் பகுதியுமான ஈச்சமோட்டையில் திரு.திருமதி முத்துக்குமாரசுவாமி கமலம் தம்பதிகளுக்கு அன்புப் புத்திரியாக உமா அவர்கள் 26/OCT/1970 ஆம் ஆண்டில் கௌரி, ஆனந்தி, பகீரதன், துளசிதரன் போன்றவர்களின் உடன் பிறப்பாக இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவரானதும் திரு. திருமதி. கனகரட்ணம் வாசுகி அம்மா தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான திருகோணமலை/ சென்மேரிஸ் மகளிர் கல்லூரி ஆசிரியர் திரு. துரைராஜரட்ணம் அவர்களைத் திருமணம் முடித்து சரண்யா, சாம்சுகேஸ் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் திருகோணமலை/சண்முகானந்த மகளிர் கல்லூரி ஆசிரியையாக கடமையாற்றினார்.அத்துடன் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு விளங்கினார். சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், சகோதரங்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 10.06.2019 இல் 48 வயதில் திருகோணமலையில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"அன்பு ஆசிரியரே
......அழகிய பேச்சே
பண்பு உள்ளமே
.......பாச உறவே
கண்ணென கல்வியை
......கற்பித்த உயிரே
விண்ணுலகு சென்றீரே
......விழிநீர் சிந்தவிட்டு"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

