மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
உதயகுமார் பொன்னையா
வயது 5515 மே, 1963 – 5 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- முள்ளியவளை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு முள்ளியவளை குமுழமுனை 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட உதயகுமார் பொன்னையா அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி மரியாம்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,
லூர்துமேரி டொமிற்றில்டா(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
நிவேதா(கனடா) அவர்களின் அன்புத் தந்தையும்,
எதிராஜ்(கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,
உதயராசா(பிரதி அதிபர்- பெரியபுலம் மகாவித்தியாலயம், யாழ்ப்பாணம்), உதயச்சந்திரன்(முகாமைத்துவ உதவியாளர்- மாஞ்சோலை வைத்தியசாலை, முள்ளியவளை), உதயரஞ்சினி(நோர்வே) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுபாஜினி(துறைத் தலைவர் - புவியியற்றுறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்), வனிதமலர்(குமுழமுனை), காந்தரூபன்(நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கவிநிலவன்(யாழ்ப்பாணம்), பிரணவிகா(யாழ்ப்பணம்), கவிந்தன்(குமுழமுனை), பிறையாளன்(குமுழமுனை), புவிதரன்(குமுழமுனை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
சுலக்ஷன்(நோர்வே), யதுர்ஷி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமாவும்,
மேக்னா எதிராஜ்(கனடா) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் வடபகுதியில் உள்ள முல்லைதீவு மாவட்டத்தில் தெங்கு தோட்டமும் நெல்வயல்களும் மரக்கறி தோட்டம். பயன்தரு மரங்களும், படித்த சமுகத்தைக் கொண்ட முள்ளியவளை குமுழமுனை 7ம் வட்டாரத்தில் 15-05-1963 இல் பொன்னையா, சின்னம்மா தம்பதிகளுக்கு அருமைப் புத்திரனாக உதயகுமார் அவர்கள் அவதரித்தார்.
சிறுவயதில் குறும்புகள் செய்து குதூகலித்து வாழ்ந்தார். இவர் பாசம் நிறைந்த மகனாக மெல்ல மெல்ல வளர்ந்ததுடன் உதயராசா, உதயச்சந்திரன், உதயரஞ்சினி போன்ற உடன்பிறப்புகளுடன் அன்பாகவும் பண்பாகவும் வளர்ந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் ஆளுமையும் அறிவும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் திரு. திருமதி சித்திரவேல் தம்பதிகளின் அழகு மகள் கௌரி லூர்த்துமேரி அவர்களை திருமணம் முடித்து இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து நிவேதா எனும் அன்பு நிறைந்த பிள்ளையைப் பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்து எதிராஜ் என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து தனது கடமையைச் செய்ததுடன் மேக்னா எனும் குழந்தைக்கு பேரனாகவும் விளங்கினார்.
உதயன் என நண்பர்களால் அன்பாக அழைக்கப்படும் இவர் உதவி புரியும் மனம் கொண்டவராக விளங்கினார், குமுழமுனை மகா வித்தியாலத்தின் பழைய மாணவனும் ஆவார். இதனால் கனடா குமுழமுனை மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் முக்கிய உறுப்பினரும் இச் சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்களுக்கான நிதி உதவிப் பங்களிப்பு செய்த ஒப்பற்ற மனிதரும் ஆவார்.
அத்துடன் முதியோரை மதிக்கும் குணம் படைத்தவராகவும், உறவினரில் அதிக அன்பும், மரியாதையும் கொண்டவராக விளங்கினார்.
இவ்வாறு மனைவி பிள்ளை என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 05-04-2019 இல் 55 வயதில் கனடாவில் உள்ள mississauga நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
"கருணை உருவே
இரக்க குணமே
காலம் மறமா
மனங்களில் நிலைத்த
உதவிடும் மனமே
ஊருக்கு நல்லவனே
உமை இழந்து
உலகே கண்ணீர் வடிக்கிறது "
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

