ஆறுதல்

மரண அறிவித்தல்

வைரமுத்து இராசமலர் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வைரமுத்து இராசமலர்

வயது 733 ஜனவரி, 1946 – 22 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
சித்தன்கேணி
வாழ்ந்த இடம்
உக்குளாங்குளம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வட்டு வடக்கு சித்தன்கேணியைப் பிறப்பிடமாகவும், வவுனியா உக்குளாங்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து இராசமலர் அவர்கள் 22-04-2013 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை செட்டிச்சியார் தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வைரமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

கலையரசி(லண்டன்), கருணாகரன்(சுவிஸ்), கலைச்செல்வி(இலங்கை), கலையமுதா(பிரான்ஸ்), கருணாநிதி(ஆதீசன்- இத்தாலி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை, கந்தசாமி, கதிரவேற்பிள்ளை மற்றும் பாக்கியலட்சுமி, தங்கமலர், தவயோகமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகலிங்கம், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, லோகேஸ்வரி, அசுபதி மற்றும் நாகம்மா, ஸ்ரீகந்தராஜா, சாந்தகுமாரி, காலஞ்சென்ற ஜெகதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கோகுலதாசன்(லண்டன்), இளவேணி(சுவிஸ்), பாஸ்கரன்(இலங்கை), குகராசன்(பிரான்ஸ்), நிர்மலா(இத்தாலி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யனார்த்தனன்(லண்டன்), தச்ஷாயினி(கொலண்ட்), சிந்துஜா(லண்டன்), அபர்ணா, அகர்சா, அனிஷா(சுவிஸ்), கம்ஷாயினி, தர்ஷாயினி(பிரான்ஸ்), நிரூசிகன், கோசிகன், பிரணவி(இலங்கை), கர்ஷா, கபினா(இத்தாலி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கணோஜன், கவின்(கொலண்ட்), லொயிதன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ந.ப 12:30 மணியளவில் கூமாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,படித்த மக்களை அதிகம் கொண்டதும் நெல்வயல்கள், வாழைத்தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்/வட்டுக்கோட்டை வடக்கு சித்தன்கேணியில் 03-Jan-1946 இல் கணபதிப்பிள்ளை செட்டிச்சியார் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வியாக இராசமலர் அழகிய குழந்தையாக அவதரித்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் காசிப்பிள்ளை, கந்தசாமி, கதிரவேற்பிள்ளை, பாக்கியலட்சுமி, தங்கமலர், தவயோகமலர் போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி ஆறுமுகம் இலட்சுமிபிள்ளை தம்பதிகளின் அழகு மகனான வைரமுத்து என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து கலையரசி, கருணாகரன், கலைச்செல்வி, கலையமுதா, கருணாநிதி எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று கண்ணெனக்காத்து வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார். குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். ருசியான உணவுகள் செய்வதில் கைப் பக்குவம் நிறைந்தவராகவும், எல்லோரிடமும் பாசம் கொண்டவராக விளங்குவார். இவ்வாறு கணவன் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 22-04-2019 இல் 73 வயதில் வவுனியாவில் உக்குளாங்குளம் எனும் இடத்திலுள்ள வீட்டில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

""எங்கள் சொந்தமே
.....எங்கள் உயிரே
நிலையில்லா உலகில்
......நிலைத்தாய் மனதில்
தங்க மனமே
....தாய் உள்ளமே
சொந்த பந்தங்களை
....பிரிந்து சென்றதேன்."

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.