ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வைரவி நடராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வைரவி நடராசா

வயது 6712 ஆகஸ்ட், 1952 – 19 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
ஏழாலை மயிலங்காடு
வாழ்ந்த இடம்
ஏழாலை மயிலங்காடு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஏழாலை தெற்கு மயிலங்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைரவி நடராசா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அப்பாவே அன்பானவரே
அழைக்கின்றோம் நாங்கள் இன்று
அணைத்திட வருவாயோ
அழுகையுடன் காத்திருக்கின்றோம்
நாம் இங்கு!

பிறந்த மண்ணிலிருந்து
நீங்கள் மறைந்தாலும்
எங்கள் நினைவில் என்றும்
நீங்காது வாழ்கின்றீர்கள் அப்பா!

சிப்பிக்குள் ஒரு முத்தென
அன்பு அமுதூட்டிக் கண்ணின்
இமை போலக் காத்து
வளர்த்த எங்கள் செல்ல அப்பா
ஓடி வாருங்கள்!!

நீங்களும் எங்களை வெறுக்கவில்லை
நாங்களும் உங்களை மறக்கவில்லை
அனுதினமும் நினைத்து நினைத்து
எண்ணித் தவிக்கின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

— இலக்கியா, அபிநயா(பேரப்பிள்ளைகள்)

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் ஏழாலை மயிலங்காட்டில் 12/AUG/1952 இல் திரு.திருமதி வைரவி லக்சுமி தம்பதிகளின் அன்பு மகனாக திரு.நடராசா அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் பேரின்பம், இராசமலர், கமலாதேவி, விமலநாதன், யோகேஸ்வரி, உதயகுமார், உதயகண்ணன், சின்னத்தங்கம், கந்தசாமி, திருநாவுக்கரசு, சந்திராதேவி, சந்திரராஜா, அற்புதம் என்பவர்களின் சகோதரமாக குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு.திருமதி சின்னக்குட்டி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகள் செல்வராணி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து ராகினி, ராகுலன், தயாகுலன், ரஜினி, வதனி எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து தேவராசா, சுதர்சினி, நித்தியா, சிவாநந்தம், வின்சன் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து பேரப்பிள்ளைகளுடன்,பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் சுருளி, சின்னத்தம்பி என அன்பாக அழைக்கப்படும் இவர் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டு விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 19.08.2019 இல் 67 வயதில் ஏழாலையில் உள்ள மயிலங்காட்டில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

மயிலங்காட்டில் உதிர்த்த மகத்தான உறவே
எழில் மிகு வதனமும் ஏழ்மை மனதுடனும்
பயின்றாய் வாழ்வில் நற்குணம் பலதை
பொழில் மனதுடன் பூவாய் மலர்ந்து
மிளிர்ந்தாய் உலகில் விழ்ந்தாய் மண்ணில்

பிற அறிவித்தல்கள்

  1. 19 ஆகஸ்ட், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.