மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வைத்திலிங்கம் மயில்வாகனம்
முன்னாள் ஆசிரியர், கணக்காளர்
வயது 8614 ஜனவரி, 1933 – 6 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் குளப்பிட்டிச் சந்தியை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் மயில்வாகனம் அவர்கள் 06-11-2019 புதன்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசபை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி(மீனாள்) அவர்களின் அன்புக் கணவரும்,
அருணா(கொழும்பு), வதனா(ஆசிரியை- யா/கொக்குவில் ஸ்தான சி.சி.த.க பாடசாலை), சுகுணா(கனடா), மோகனா(கொழும்பு), ஜமுனா(சுவிஸ்), மயூரன்(கொக்குவில் தபாலகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நாகம்மா(கனடா) அவர்களின் ஆருயிர்ச் சகோதரரும்,
இரத்தினராசன்(கொழும்பு), பிறைசூடி(பிரதேச செயலகம் நல்லூர்), சிவராச சிங்கம்(கனடா), கனகேந்திரன்(கொழும்பு), உருத்திரன்(சுவிஸ்), கஜேந்தினி(ஆசிரியை- யா/இராமநாதன் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபை(கனடா), செல்லம்மா, திலகவதி, சபாரெத்தினம், தில்லையம்பலம், மருதப்பு மற்றும் திருஞானம், திருச்செல்வம், ஜெகதாம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவ்யா- ரவிமோகன், திவாகுலன், திசாரகன், அனுராகன், அகிராகன், மதுஷன், இராகவி, ஆதவி, கோபிகா, கோகுலன், அபிநயா, ஆருஜன், ஆஜிகன், ஹர்சனா, அகானா ஆகியோரின் அன்புப் பேரனும்,
திரவியா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் நடைப்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
பழகுவதற்க்கு இனிமையானவரான வைத்திலிங்கம் மயில்வாகனம் அவர்களின் வாழ்க்கை வராலாறிது
தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த புங்குடுதீவில் 14/JAN/1933 ஆம் ஆண்டில் திரு.திருமதி வைத்திலிங்கம் சின்னாச்சி தம்பதிகளுக்கு அழகு மகனாக திரு.மயில்வாகனம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் நாகம்மா எனும் அன்பு உடன்பிறப்புடன் பிறந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், ஆசிரியராக பணியாற்றி அறப்பணி செய்து வந்தார். வளர்ந்து பெரியவரானதும் திரு.திருமதி கனகசபை தங்கமுத்து தம்பதிகளின் அழகிய பெண்ணான பரமேஸ்வரி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து வந்தார்.
சந்தோஷமாக வாழ்ந்து வந்ததன் பயனாக அருணா, வதனா, சுகுணா, மோகனா, ஜமுனா, மயூரன் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து இரத்தினராசன், பிறைசூடி, சிவராசசிங்கம், கனகேந்திரன், உருத்திரன், கஜேந்தினி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து, திவ்யா-ரவிமோகன், திவாகுலன், திசாரகன், அனுராகன், சுகிராகன், மதுஷன், இராகவி, ஆதவி, கோபிகா, கோகுலன், அபிநயா, ஆருஜன், ஆஜிகன், ஹர்சனா, சுகானா போன்ற பேரப்பிள்ளைகளுடனும் திரவியா எனும் பூட்டப்பிள்ளையுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரான இவர், புத்தகங்கள் வாசிப்பதையும், நாளிதழ்கள் வாசிப்பதையும் அன்றாட பொழுதுபோக்காக கொண்டிருந்தார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை, உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 06.11.2019 அன்று அவரது 86வது அகவையில் கொக்குவிலில் இறையடி எய்தினார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

