ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வைத்திலிங்கம் திவ்வியானந்தன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வைத்திலிங்கம் திவ்வியானந்தன்

Beauty International, Star Lighting, Home Decor உரிமையாளர்

வயது 627 மே, 1955 – 16 அக்டோபர், 2017

பிறந்த இடம்
புங்குடுதீவு 11ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 2ம் வட்டாரம் ஆஸ்பத்திரி வீதியை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைத்திலிங்கம் திவ்வியானந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு நினைவு

அன்பு என்னும் விழுதினை
ஆலமரம் போல் ஊன்றி
பண்பு என்னும் கதிர்களை
பகலவன் போல் பரப்பி
இல்லறம் என்னும் இன்பத்தை
இமை போல் காத்து நின்றவரே

நீங்கள் பிரிந்து
ஒரு வருடம் ஓடிப்போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.

உழைப்பை உரமாக்கி
பாசமாய் பணிவிடைகள்
பல செய்து
வாழ்க்கை எனும் பாடத்தை
எமக்கு கற்றுத் தந்த
எமது உயிர் தந்தையே

ஓராண்டு கடந்தும்
உங்கள் நினைவுகள் எமை
தினமும் வாட்டி வதைக்கின்றது.

நீங்கள் இல்லாத உலகம்
நிம்மதி இழந்து தவிக்க
போகும் பாதைகள் புரியாமல்
நித்தமும் நினைக்கையில்
கண்ணீர் ஆறாய் பெருக்கெடுத்து
பாயிது அப்பா.

ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்.

உங்கள் ஆத்மா சாந்தியடைந்து
இறைவனடி சேர எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி தினமும்
உங்கள் பாதம் பணிகின்றோம்.

மனைவி, மக்கள், மருமகள், பேரப்பிள்ளை, சகோதரர்கள், உறவினர்கள்

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.