ஆறுதல்

மரண அறிவித்தல்

வாலாம்பிகை வேலாயுதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வாலாம்பிகை வேலாயுதன்

வயது 8612 டிசம்பர், 1932 – 10 ஜூலை, 2019

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
பிரித்தானியா, Clayhall

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியம், லண்டன் Clayhall ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாலாம்பிகை வேலாயுதன் அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

குகதாஸ்(இலங்கை), ராகினி(அவுஸ்திரேலியா), சிராணி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, நவரத்தினராஜா, ஜெயரத்தினராஜா, செல்வராஜா, விக்னேஸ்வரன் மற்றும் ஞானம்பிகை(கனடா), விக்னேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ரஜி கோகிலா(இலங்கை), ராஜ்குமார்(அவுஸ்திரேலியா), விக்னகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிராமி(ஐக்கிய அமெரிக்கா), சிவகாமி(இலங்கை), கோகுலன்(அவுஸ்திரேலியா), நிருஷா(பிரித்தானியா), தனுசா(பிரித்தானியா), குமரன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மஹியல்(இலங்கை), மகீத்தா(இலங்கை), மீலா(அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs Valambigai Velayuthan was born in Jaffna Vannarpannai and lived in United Kingdom, London Clayhall, passed away peacefully on Wednesday 10th july 2019.

Loving Daughter of Late Rasarathinam and Late Rasamma.

Loving Daughter-in-law of Late Thambapillai and LateThangamma.

Loving Wife of Late Valauthan,

Loving Mother of Kugathas(Srilanka), Ragini(Australia) and Shirani(UK).

Loving Mother-in-law of Raji Kokila(Srilanka), Rajkumar(Australia) and Vignakumar(UK).

Loving Sister of Late Nadaraja, Late Navarathinaraja, Late Jeyarathinaraja, Late Selvaraja, Late Vigneshwaran and Ganambigai(Canada), Vigneshwari(Srilanka).

Loving Grandmother of Abirami(USA), Sivagami(Srilanka), Gokulan(Australia), Nirusha(UK), Dhanusha(UK) and Kumaran(Srilanka).

Loving Great-Grandmother of Mehayel(Srilanka), Mageedha(Srilanka), Meela(Australia).

This Notice is Provided for all Family and Friends.

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் வண்ணார்பண்ணையில் 12/DEC/1932 இல் இராசரத்தினம் இராசம்மா தம்பதிகளின் அருமைப் புத்திரியாக வாலாம்பிகை அவர்கள் நடராஜா, நவரத்தினராஜா, ஜெயரத்தினராஜா, செல்வராஜா, விக்னேஸ்வரன், ஞானம்பிகை, விக்னேஸ்வரி போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் தம்பாப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான வேலாயுதன் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக குகதாஸ், ராகினி, சிராணி போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து ரஜிகோகிலா, ராஜ்குமார், விக்னகுமார் என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து அபிராமி, சிவகாமி, கோகுலன், நிருஷா, தனுசா, குமரன் போன்ற பேரப்பிள்ளைகளுடனும், மஹியல், மகீத்தா, மீலா எனும் பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கியதுடன் சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 10.07.2019 இல் 86 வயதில் பிரித்தானியாவில் உள்ள Clayhall நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

வட்ட முகமே
வள்ளல் மனமே
சிட்டுப் போல்
சிந்தை உள்ளமே
கட்டுக் கோப்புடன்
காத்தருளி
பட்ட மரம் போல்
வாடிப் போனீரே

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.