1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வல்லிபுரம் கந்தசாமி
முன்னாள் அதிபர்- பலாலி ஆசிரியர் கலாசாலை, முன்னாள் யுனெஸ்கோ கணித, விஞ்ஞானக் கல்வி ஆலோசகர்- பூட்டான், முன்னாள் பௌதீகவியல், கணித ஆசிரியர்- சயன்ஸ் சென்ரர், முன்னாள் பகுதி நேர ஆங்கில ஆசிரியர்- கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரி, அறங்காவலர் அவைத் தலைவர்- கரவை வெல்லனிற் பிள்ளையார் கோவில்
வயது 8710 மார்ச், 1932 – 1 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- கரவெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த வல்லிபுரம் கந்தசாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
முதலாம் அண்டு நினைவு நாள் வந்ததோ
ஒவ்வொரு நிமிடமும் உங்கள் நினைவுதான் அப்பா!
எங்கள் அன்பு அப்பாவே
இதயத் துடிப்பின் அருமருந்தே
காலம் செய்த கோலத்தினால்
ஒவ்வொரு கணப் பொழுதும் துடிக்கின்றோம்
உங்கள் ஒழுக்கம் நற்பண்பு மதிப்புகள் யாவும்
எங்கள் வாழ்வில் என்றென்றும் வழிகாட்டியாக இருக்கும்
துன்பம் இன்றி கஷ்டங்கள் இன்றி
எங்களை காத்தீரே எம் தந்தையே!
எம்மை விட்டு பிரிந்ததேனோ?
மாதங்கள் பன்னிரெண்டு ஆனாலும் அழியாது
எம் துயரம் மறையாது உங்கள் நினைவு!
மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால் உங்களுக்கு
பிள்ளையாக பிறக்கும் பேறு பெற வேண்டும்- அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் வீரம் செறிந்த வடமராட்சியில் நெல்வயல், வெங்காயவயல், புகையிலைத்தோட்டம் என்பவற்றுடன் வீட்டுக்கு வீடு ஆசிரியர்களைக் கொண்ட கரவெட்டியில் 10-03-1932 இல் வல்லிபுரம் சின்னப்பிள்ளை தம்பதிகளுக்கு அருமைப் புதல்வனாய் கந்தசாமி அவர்கள் பொன்னம்மா,சிவகாமிப்பிள்ளை,வேலாயுதம்,செல்வவிநாயகம் ஆகிய உடன் பிறப்புகளுடன் அவதரித்தார்.
மேலும் அறிவு நிறைந்த இவர் வளர்ந்து உயர் நிலை அடைந்ததும் வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அறிவு மகள் பராசக்தி அவர்களை திருமணம் முடித்து மதிதரன், கமலவதனி, சிவாஜினி, கங்காதரன், சுபோதினி, முரளிதரன், கலாநிதி, கிரிதரன், உமாதரன், யாழினி எனும் அன்புப் பிள்ளையை பெற்றெடுத்து பாசமாக பாதுகாத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் தான் படித்த கல்வியை மாணவர்களுக்கு புகட்டும் முகமாக 1970 இல் சந்தியாப்பிள்ளை போஸ்ட் மாஸ்டர் வீட்டில் ஆரம்பிக்கப்பட்ட சயன்ஸ் சென்ரரில் பௌதீக ஆசிரியராக கற்பித்ததுடன், அங்கே மரியாம்பிள்ளை மாஸ்டர்- ஆங்கிலமும், சண்முகதாஸ் மாஸ்டர்- இரசாயணமும், நல்லையா மாஸ்டர்- பிரயோக கணிதம் என ஆசிரிய யாம்பவான்களால் மாணவர்களுக்கு சிறந்த கல்வி போதிக்கப்பட்டதுடன் இவர் படிப்பிக்கும் போது இவரின் குரல் ஒலி பல மீற்றர் தூரத்திற்கு கேட்கும் வல்லமை கொண்டது. கரவெட்டி விக்னேஸ்வராவும்,பருத்தித்துறை ஹாட்லியும் எமக்காக இவரை உருவாக்கிய கல்விக் கழகங்களாகும். அதனை மறக்காமல் கரவெட்டி விக்கினேஸ்வராக் கல்லூரியில் பகுதி நேர ஆங்கில ஆசிரியராக கடமையாற்றினார். அத்துடன் கொழும்பு தேஸ்டன், கொக்குவில் இந்து பாடசாலையில் ஆசிரியராக பணியாற்றியதுடன் பின்னர்1960களில் பலாலி ஆசிரிய கலாசாலை அதிபராகி இரண்டு தசாப்தங்கள் பல ஆயிரம் ஆசிரியர்களை உருவாக்கினார்.
1979 இல் யுனெஸ்கோ திட்டத்தின் கீழ் பூட்டான் அரசின் கல்வி ஆலோசகராக பதவி உயர்வு பெற்று கடமை செய்தார். இதன் பின் புலமைப்பரிசில் பெற்று ஓக்ஸ்பேட் பல்கலைக்கழகத்தில் Diploma in Education பட்டமும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் Diploma in Education Phsycology ஆகிய சான்றிதழ்களைப் பெற்றார்.
கல்வியையும் கரவெட்டியையும் இணைக்க இவர் வன்னி, மன்னார், திருமலை, மட்டக்களப்பு(வடக்கு கிழக்கு) ஆகிய ஆசிரிய மாணவர்களுக்கு கல்வி கற்பித்ததுடன், மலையகம், பேருவளை, தென்னிலங்கை என தமிழ் முஸ்லிம் ஆசிரிய பரம்பரையை முழு இலங்கையிலும் உருவாக்கினார். இவரது சமூகப்பணியாக கரவை வெல்லனிற் பிள்ளையார் கோவில் அறக்காவலராகவும், தமது குல தெய்வமாகிய கிராய் பிள்ளையாரின் மீது நிறைந்த பக்தியை கொண்டிருந்ததுடன் அதன் அறங்காவலர் சபைக்கு தலைவராக 1987 களில் இருந்ததுடன், ஐக்கிய நாணய சங்கத்தில் முக்கிய செயற்பாட்டாளராகவும் விளங்கினார்.
இவரது சமூகம் சார்ந்த பணி கனடா வரை நீண்டு சென்றதைக் காணலாம் எனவே கல்வி உள்ளவரையும் கரவெட்டி உள்ளவரை கந்தசாமி மாஸ்டரின் வரலாறும் இணைந்து நிற்கும். இவ்வாறு உறவுகளை விடவும், நட்புகளை விடவும் சிறந்த நண்பன் உனது உடல் என்பர் சமகால உடலியல் அறிஞர்கள் அவ்வாறே தேகாரோக்கியமாக இறுதிவரை மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 01.04.2019 இல் 87 வயதில் மில்லியந்தோட்டம் கரவெட்டியில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"கல்விச் சிகரமே
அறிவுக் கடலே
கரவெட்டி மைந்தன்
கால் பிடியா உத்தமனே
தரணியில் உயர்ந்து
தமிழன் புகழ் உயர்த்தி
தாய் மண்ணில்
மனங்களில் நிலைத்தார் "
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

