ஆறுதல்

மரண அறிவித்தல்

வல்லிபுரம் கந்தசாமி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வல்லிபுரம் கந்தசாமி

வயது 7824 ஜூலை, 1939 – 29 ஏப்ரல், 2018

பிறந்த இடம்
கரவெட்டி
வாழ்ந்த இடம்
கரவெட்டி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கரவெட்டி துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் கந்தசாமி அவர்கள் 29-04-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகப்பர் வல்லிபுரம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பையா, கண்ணாத்தா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சூரியமூர்த்தி(இலங்கை), சூரியகலா(இலங்கை), சூரியகெங்கா(சுவிஸ்), சூரியலதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தர்மராணி(இலங்கை), யோகரத்தினம், தியாகலிங்கம்(சுவிஸ்), குகதாசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற வள்ளிப்பிள்ளை, நாகம்மா, தங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மகேந்திரன், முருகேசு மற்றும் வள்ளிப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்ற பசுபதி, பாக்கியம், நல்லம்மா, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரசாந்த்(B.Sc. Eng- இலங்கை), யோகதாஸ், ரெபேக்கா(சுவிஸ்), வசந்தராஜா, வாசுகி(சுவிஸ்), திவாகன்(M.Sc ETH- சுவிஸ்), திவ்வியா(சுவிஸ்), அதிசா(சுவிஸ்), அபிசன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

அஸ்வினா(சுவிஸ்), அத்வின்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

வீட்டு முகவரி:
துன்னாலை வடக்கு,
கரவெட்டி,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.