மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வாரித்தம்பி சிதம்பரப்பிள்ளை
வயது 884 பிப்ரவரி, 1931 – 25 மே, 2019
- பிறந்த இடம்
- மீசாலை
- வாழ்ந்த இடம்
- வட்டக்கச்சி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலை புத்தூர் சந்தியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி(933 Civic Center), கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாரித்தம்பி சிதம்பரப்பிள்ளை அவர்கள் 25-05-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை பரமேஸ்வரி அம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தனலஷ்சுமி வாரித்தம்பி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
இரவிச்சந்திரன், தேவேந்திரன், பாலேந்திரன், திலகவதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வேலுப்பிள்ளை, காலஞ்சென்றவர்களான சிவஞானம், பூபதி, மற்றும் யோகம்மா, இந்திராணி, திருச்செல்வம், காலஞ்சென்ற ஆச்சிமுத்து ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சசிகலா(MA), சாந்தி, கணேசமூர்த்தி, குமுதினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கபிதன், கயன், ஜெசிகன், ஆரணன், தினேகா, சன்விக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய தென்மராட்சியில்,தெங்கு தோட்டம், பயன்தரு மரங்கள்,நெல்வயல்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த மீசாலை புத்தூர் சந்தியில் 04/FEB/1931 ஆம் ஆண்டில் சிதம்பரப்பிள்ளை பரமேஸ்வரி அம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக வாரித்தம்பி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் வேலுப்பிள்ளை, சிவஞானம், பூபதி, யோகம்மா, இந்திராணி, திருச்செல்வம், ஆச்சிமுத்து போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் செல்லத்துரை பூரணம் தம்பதிகளின் அன்பு மகள் தனலஷ்சுமி என்பவரைத் திருமணம் செய்து இன்பமாக வாழ்ந்து இரவிச்சந்திரன், தேவேந்திரன், பாலேந்திரன், திலகவதி போன்ற பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்ததுடன் சசிகலா, சாந்தி, கணேசமூர்த்தி, குமுதினி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து மாமாவிற்குரிய கடமையை சிறப்புற செய்ததுடன் கபிதன், கயன், ஜெசிகன், ஆரணன், தினேகா, சன்விக்கா போன்ற பேரப்பிள்ளைகளுடன் பேசி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் இவர் இடப்பெயர்வு காரணமாக கிளிநொச்சி வட்டக்கச்சியில் வாழ்ந்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், சகோதரபாசம் நிறைந்தும்,பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 25.05.2019 இல் 88 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
முழுக் கதையையும் வாசிக்க
"மீசாலை மண்ணின்
...... மீசைக்காரனே
மிகக் கவனமாக
.......வளர்த்த உறவே
கருணை மனமே
........காவல் தெய்வமே
காலமதில் நிலைத்து
......பிரிந்து சென்றீரே"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

