1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வசந்தகோகிலம் நடராஜா
வயது 769 ஏப்ரல், 1943 – 14 மே, 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- வண்ணார்பண்ணை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சிறாம்பியடியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை அரசடி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த வசந்தகோகிலம் நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்களின் ஆருயிர் அம்மா!!
ஆண்டுகள் ஒன்று ஓடியதே
எங்களின் உயரிய ஒளி நிலவே
எமை நீக்கி மறைந்தீர்கள் அம்மா!
எம் வாழ்வில் வசந்தமாக வாசம் வீசி
வாழ்க்கையை ஒளி ஊட்டினீர்கள் அம்மா!
மீண்டும் வருமா வசந்தம் என்ற
தொடரான கேள்விகளோடு
தொடர்கின்றது எம் கண்ணீர் பயணம் அம்மா!
உங்கள் அன்பான அரவணைப்பாலும்,
தைரியமான பேச்சாலும் எம் வாழ்வில் கலந்தீர்கள் அம்மா
எம்மை தாங்கி நின்ற உயிர் நிலவே
உங்கள் குரல் கேளாமல் பரிதவிக்கும்
எம் குமுறல்கள் உங்கள் காதுகளில்
கேட்கிறதா அம்மா!! அம்மா!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..
நித்தம் உங்கள் நினைவுகளுடன்
கணவர் , பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்ததும் படித்தவர்களைக் கொண்டதும், தெங்கு தோட்டம், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்ப்பாணம் சிறாம்பியடியில் 09/APR/1943 ஆம் ஆண்டில் இராசதுரை நாகமுத்து தம்பதிகளுக்கு அன்பு மகளாக வசந்தகோகிலம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் அன்னலட்சுமி, ராதபுஸ்பம், விஜயலட்சுமி, புஸ்பராணி போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் வைத்திலிங்கம் சின்னாச்சி தம்பதிகளின் அழகு நிறைந்த ஆண் மகனான சுங்க அதிகாரியான நடராசா என்பவரைத் திருமணம் முடித்து இளங்கோ, மணிவண்ணன், தமயந்தி, ஜானகி, வாசுகி போன்ற பிள்ளைகளை பெற்று வளர்த்ததுடன் ருனித்தா, விஜித்தா, சிங்காரவேலன், பஞ்சகுமார், இராகுலன் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து தனது கடமையை சிறப்புறச் செய்ததுடன் சோதியா, பாணிலா, இளமாறன், ஆதிகேசவன், குந்தவை, நிதுஷா, சௌமிகா, நிருத்திகா, பிரணவகுமரன், சாருண்யா, சத்தியன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் பேசி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் தனது கடைசி காலங்களில் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதுடன், பூமரங்களை வளர்த்தலும், சுவையான உணவுகள் செய்வதும், சிற்றூண்டி செய்வதில் கைதேர்ந்தராக விளங்கியதுடன், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு கணவன்,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 14.05.2019 இல் 76 வயதில் வண்ணார்பண்ணையில் உள்ள அரசடி வீதியில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"அன்பு உறவே
......அன்னை மடியே
பண்பு மலையே
......பாச உள்ளமே
நெஞ்சில் சுமந்த
...... நேச உருவே
நீண்ட வாழ்வில்
......நீங்களே கடவுள்"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

