31ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
வசந்தகுமாரி பரமானந்தன்
வயது 5926 பிப்ரவரி, 1958 – 22 ஜூன், 2017
- பிறந்த இடம்
- இணுவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- இணுவில் மேற்கு, சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். இணுவில் கிழக்கு மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வசந்தகுமாரி பரமானந்தன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
எமைப் பிரிந்து நீங்கள் சென்று
மாதம் ஒன்று ஆகியதோ!
உங்கள் பாதச் சுவடுகள் பதிந்த இடம் மறையவில்லை
கண்ணீரின் ஈரமதும் எங்கள் கன்னத்தில் காயவில்லை!
எங்கெங்கு பார்த்தாலும் உங்கள் முகம் தெரிகிறதே
எக்குரலைக் கேட்டாலும் அது உங்கள் குரல் ஆகிறதே
ஏன் மறைந்து நின்று எம்மை அழ வைக்கிறீர்கள்?
எங்களது வீடு இங்கே இருளடைந்து கிடக்கின்றதே
ஒளி தெரியா இடத்தினிலே ஒதுங்கி இங்கே வாடுகின்றோம்
நித்திரையை நாம் இழந்தோம் நிம்மதியை நாம் தொலைத்தோம்
ஏன் இந்த வாழ்க்கை எனப் புரியவில்லை எங்களுக்கு!
எங்கள் தெய்வம் நீங்கள் அம்மா
எமை விட்டு ஏன் பிரிந்தீர்?
கலங்கி இங்கே கதறுகின்றோம்
உங்கள் கண்களுக்குத் தெரிகிறதா?
மௌனமாய் இருந்து எம்மை மனத்துயரில் ஆழ்த்துவதேன்?
பிறந்தவர் எல்லோரும் இறப்பதுதான் நியதியம்மா
ஆனாலும் அதை ஏற்க எங்கள் மனம் ஒப்பவில்லை!
ஆண்டவனின் பாதமதில் உங்கள் ஆத்மாதான் சாந்திபெற
கைகூப்பி வணங்கி எங்கள் கண்ணீரால் அஞ்சலித்தோம்.
உங்கள் பிரிவால் மீளாத்துயரில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்தினர்.
எங்கள் அன்புத்தெய்வத்தின் மரணச்சடங்கில் நேரில் வந்து கலந்து கொண்டவர்களுக்கும், பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தபோது வந்து பார்த்து அனுதாபம் கூறியவர்களுக்கும், வெளிநாட்டிலும், உள் நாட்டிலும் இருந்து தொலைபேசிமூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பதற்கிணங்க எமது வீட்டுக்கு உணவு கொண்டு வந்து தந்து எமது பசி போக்கியவர்களுக்கும் எங்கள் இதய பூர்வமான அன்பு கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 20-07-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். மேலும் 22-07-2017 சனிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் சூரிச் அருள்மிகு சிவன்கோவிலில் ஆத்மசாந்திப் பூசையும் மதியபோசனமும் வழங்கப்படும் என்பதை அன்புடன் அறியத்தருவதோடு அதில் கலந்துகொண்டு அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— பரமானந்தம் குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

