மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வசந்தி குலவீரசிங்கம்
முன்னை நாள் நிறைவேற்று பொறியியலாளர்(Chief Engineer) கட்டிட திணைக்களம் யாழ்ப்பாணம்
வயது 5816 ஆகஸ்ட், 1960 – 31 மே, 2019
- பிறந்த இடம்
- துன்னாலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தி குலவீரசிங்கம் அவர்கள் 31-05-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குலவீரசிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் ஏக புத்திரியும்,
நாகேந்திரன்(பிரித்தானியா), குலேந்திரன்(பிரித்தானியா), கணேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
Dr.அஞ்சலா அவர்களின் அன்பு மாமியாரும்,
சந்திரகுமாரி(சாந்தி), சூசன் ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான கணேசன், சிவாதேவி- சத்தியநாதன் மற்றும் அருணகிரிநாதன்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான சிவராஜா, நித்தியலக்சுமி- நல்லைநாதன் மற்றும் பாலசுப்பிரமணியம்(பிரித்தானியா), காலஞ்சென்ற Dr. பாலகிருஷ்ணன் மற்றும் வீமவேற்பிள்ளை(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான சரஸ்வதி- தர்மலிங்கம், பகவதி- ஜெகதீஸ்வரன் மற்றும் சச்சிதானந்தமூர்த்தி(கனடா), திருஞானசம்பந்தபிள்ளை(பிரித்தானியா), விக்னேஸ்வரபிள்ளை(கனடா), Dr. யோகலக்சுமி- பொன்னம்பலம்(இலங்கை), தனலக்சுமி- பாலகிருஸ்ணன்(கனடா), தியாகலக்சுமி(கனடா), வரலக்சுமி- கமலநாதன்(கனடா), Dr. தருமலக்சுமி- சோமசுந்தரம்(அவுஸ்திரேலியா), ஜெயலக்சுமி- சிறிகாந்தன்(அவுஸ்திரேலியா), தைரியலக்சுமி- சண்முகரட்ணம்(கனடா), Dr. மகாலக்சுமி- மனோகரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும் நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,நெல்வயல்கள், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள், பனந்தோப்பு என அழகு நிறைந்த துன்னாலை வடக்கில் குலவீரசிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளுக்கு ஏக புத்திரியாக செல்வி வசந்தி அவர்கள் 16/Aug/1960 ஆம் ஆண்டில் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் நாகேந்திரன், குலேந்திரன், கணேந்திரன் போன்ற உடன் பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து நன்கு படித்து உயர்நிலை அடைந்ததுடன், கனடா போன்று பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா சென்று மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் யாழ்ப்பாணம் கட்டிட திணைக்களத்தில் நிறைவேற்றுப் பொறியியலாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன்,துன்னாலை பிள்ளையார் கோவில் பரிபாலன நிர்வாக பொறுப்பாளராக செயற்பட்டு கும்பாபிஷேக விழாப் பணிகளை கஸ்ரப்பட்டு சிறப்பாக செய்தார், இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,அமைதியும் சாந்தமும் பொறுமையும் குறையாக் கருணையும் மன்னிப்பும் கொண்டு விளங்கினார். சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார்.
இவ்வாறு உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 31.05.2019 இல் 58 வயதில் கொழும்பில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்
"துன்னாலை மண்ணின்
......இளகிய உள்ளமே
துயர் துடைக்கும்
.......அன்பான உருவே
புன்னகை மனமே
......பூ உடலே
புகழாய் வாழ்ந்து
......புகுந்தீர் சொர்க்கம்"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

