மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வீரசிங்கம் கமலநாதன்
வயது 7214 நவம்பர், 1946 – 1 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை வீதி 1ம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மகாவித்தியாலய மாவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் கமலநாதன் அவர்கள் 01-07-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரசிங்கம், நவரட்ணமணி தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அம்பிகாமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயந்தி(சுவிஸ்), டயாளினி(சுவிஸ்), ரேணுகா(அவுஸ்திரேலியா), பிரதீபா(கொழும்பு), சர்மினி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமார், குருமூர்த்தி, ஸ்ரீரவி, காலஞ்சென்ற டினேஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாகலோக தேவி, இராஜேஸ்வரி, பத்மசோதி, இராசலிங்கம், சண்முகலிங்கம், சடாச்சரம், சதாநந்தராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கனகலிங்கம், காலஞ்சென்ற தவமலர், அரியமலர், மகாலிங்கம், பாக்கியலட்சுமி, நித்தியலிங்கம், தனலட்சுமி, காலஞ்சென்ற சீதாலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கனீஸ், விருட்சன், ஆதுஜன், சந்தோஷ், அனுஜா, சக்தி, அக்ஷ்யா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 08-07-2019 திங்கட்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த பருத்தித்துறை வீதி 1ஆம் ஒழுங்கையில் 14/NOV/1946 இல் திரு.திருமதி வீரசிங்கம் நவரட்ணமணி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக திரு.கமலநாதன் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் நாகலோகதேவி, இராஜேஸ்வரி, பத்மசோதி, இராசலிங்கம், சண்முகலிங்கம், சடாச்சரம், சதாநந்தராஜா போன்ற உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும் திரு திருமதி சுப்பிரமணியம் தவமணி தம்பதிகளின் அன்பு மகள் அம்பிகாமலர் எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக ஜெயந்தி, டயாளினி, ரேணுகா, பிரதீபா, சர்மினி போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சிவகுமார், குருமூர்த்தி, ஸ்ரீரவி, டினேஜன் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து கனீஸ், விருட்சன், ஆதுஜன், சந்தோஷ், அனுஜா, சக்தி,அக்ஷ்யா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் நாதன் என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் தன்நலமற்ற சமூக சேவையாளரும்,எல்லோர் நெஞ்சங்களிலும் அழியாத அன்பை விதைத்தவர். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார். இவ்வாறு மனைவி மற்றும் பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் உற்றார்,உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 01.07.2019 இல் 72 வயதில் கொழும்பு-13 இல் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
கமலக் கண்ணனே எங்கள் காலைக் கதிரே
வலம் வரும் வசந்த தேரே
நிலம் ஆளும் நிஜ மாதாவே
குலம் காத்து வலம் வந்த
பலம் கொண்ட பாச மலையே
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

