ஆறுதல்

நன்றி நவிலல்

வேலையா சிவபாக்கியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலையா சிவபாக்கியம்

வயது 6618 மே, 1953 – 21 ஆகஸ்ட், 2019

பிறந்த இடம்
நீர்வேலி
வாழ்ந்த இடம்
மயிலிட்டி, கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு "

எமது அன்புத் தெய்வம் இறையடி எய்திய செய்தி கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோர்கள், தொலைபேசி மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்க்கும், உற்றார், உறவினர்க்கும், நண்பர்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் நீர்வேலியில் 18/MAY/1953 இல் திரு.திருமதி கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அருமை மகளாய் சிவபாக்கியம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் கோபால், நேசமணி, செல்வன், ராசு எனும் உடன்பிறப்புகளுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி கந்தர் சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகன் திரு.வேலையா என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாகவும் வாழ்ந்ததன் பயனாக தயாளினி, சுதர்ஷினி, சுபாஷினி, யசிந்தன், நிரோஜன் போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்து விஜேந்திரன், நகுலேஷ்வரன், மயூரன் போன்றவரை திருமணம் முடித்து வைத்து ஜிவிஷனா, ஜினுர்ஷா, அனன்ஷிகா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் மாம்பழம் என அன்பாக அழைக்கப்பட்ட இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் சகோதரங்கள்,உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 21.08.2019 இல் 66 வயதில் கொழும்பில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

சிவந்த வதனமே சிந்தனை உருவே
கவரும் குணமே கருனை மனமே
புவண அழகே பூவிழி பார்வையே
சிவ அருளே மாம்பழ நாமமே
கவனம் கூறி காத்திட்ட உயிரே
பவனி ஆகி பதைபதைக்க வைத்தீரே

பிற அறிவித்தல்கள்

  1. 23 ஆகஸ்ட், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.