மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலாயுதர் காசிநாதர்
ஓய்வுபெற்ற வயோதிபர் இல்ல பணியாளர்
வயது 7521 ஆகஸ்ட், 1944 – 11 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- கைதடி கிழக்கு
- வாழ்ந்த இடம்
- கைதடி கிழக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதர் காசிநாதர் அவர்கள் 11-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதர் சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, சடைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுஜந்தன், சுகிர்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தெய்வானை அவர்களின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற அம்பகர், வரதராசா(ஓய்வுபெற்ற சாவகச்சேரி நகரசபை பணியாளர்) மற்றும் சண்முகராசா, யோகேஸ்வரி(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான சத்தியேஸ்வரி, பாலசிங்கம் மற்றும் சிறீஸ்கந்தராசா(லண்டன்), புஸ்பராசா(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுனிதா, கலெக்சனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புனிதவதி, புவனேஸ்வரி, சந்திரன்(சுவிஸ்), புஸ்பலீலாவதி, குகாந்தகி(லண்டன்), பேரின்பநாயகி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகலனும்,
கவினன், சப்தகி, ரிஷிகா, கங்கிதன்(லண்டன்), அக்ஷரன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-02-2020 வியாழக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கைதடி ஊற்றல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

