ஆறுதல்

மரண அறிவித்தல்

வேலாயுதம்  குணநாயகம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலாயுதம்  குணநாயகம்

வயது 6625 டிசம்பர், 1952 – 23 அக்டோபர், 2019

பிறந்த இடம்
யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்
யாழ்ப்பாணம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஸ்ரான்லி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் குணநாயகம் அவர்கள் 23-10-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம் வேலாயுதம், இராணி தம்பதிகளின் அன்பு மகனும்,

அரியநாயகம்( Marine Engineer), இராஜநாயகம்(ஓய்வுநிலை பொதுச்சுகாதாரப் பரிசோதகர்- உள்ளூராட்சி சேவை), செல்வநாயகம்(பாகிஸ்தான்), பிறேமச்சந்திரன்(பிரான்ஸ்), உதயகுமார்(பிரான்ஸ்), கமலாதேவி(பிரான்ஸ்), சுசீலாதேவி(பிரான்ஸ்), நாகேஸ்வரி(பிரான்ஸ்), சுலோசனாதேவி(கொலண்ட் ) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பரிமளம், பிரான்சிஸ்கா(றஞ்சி- ஓய்வுநிலை ஆசிரியை யா/டிறிபேக் கல்லுாரி), மேசி குளோரிடா(ஜெசி- பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான ருக்மணி(Doctor), பாக்கியராசா, குணசேகரம், சந்திரசேகரம்(பிரான்ஸ்), சிவராசா(கொலண்ட்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜுயினி(லண்டன்), பிராங்கிளின் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

ஆர்னோல்ட்(பிரான்ஸ்), றொனால்ட்(பிரான்ஸ்), விதுஷன்(பிரான்ஸ்), சோபி(பிரான்ஸ்), அர்ச்சனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சசிகலா(பிரான்ஸ்), சசிகரன்(பிரான்ஸ்), சசிதரன்(பிரான்ஸ்), தணிகைக்குமரன்(பிரான்ஸ்), கஜன்(பிரான்ஸ்), பிரதீப்(பிரான்ஸ்), தினேஷ்(பிரான்ஸ்) , பிரசாந்த்(பிரான்ஸ்), பிரதாப்(பிரான்ஸ்) , பிரியங்கா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் மிக அருகில் உள்ள அழகிய இடமும் மக்கள் செறிந்து வாழும் பகுதியும் மோட்டார் உதிரிப்பாகங்கள் நிறைந்து கானப்படும் ஸ்ரான்லி வீதியில் 25/DEC/1952 ஆம் ஆண்டில் திரு.திருமதி வல்லிபுரம் வேலாயுதம் இராணி தம்பதிகளுக்கு பாசமிகு மகனாக திரு. குணநாயகம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் அரியநாயகம், இராஜநாயகம், செல்வநாயகம், பிறேமசந்திரன், உதயகுமார், கமலாதேவி, சுசீலாதேவி, நாகேஸ்வரி, சுலோசனாதேவி எனும் உடன்பிறப்புடன் சேர்ந்து வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், இன்பமாகவும் வாழ்ந்து வந்தனர்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் குணம் என அன்பாக அனைவராலும் அழைக்கப்படும் இவர் கடின உழைப்பாளியும், அதிக பக்தி கொண்டவரும் உறவுகளிடம் பாசத்தை பொழிந்து, வாழ்வில் நேர்மையை கடைபிடித்த இவர் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணமும் கொண்டு விளங்கினார்.

இவ்வாறு சகோதரங்கள்,உற்றார் உறவினர், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 23.10.2019 இல் 66 வயதில் யாழ்ப்பாணத்தில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

எங்கள் உடன் பிறப்பேதங்க மனம் கொண்ட உள்ளமே
அங்கம் பாராது அனைத்தையும் புரியும்
அன்பு உடன் பிறப்புநின்னை நினைத்து ஏங்கி
நித்தம் மனம் வாடிநொந்து திரிந்தோம் காலம் முழுவதும்
இப்போஎமைப் பிரிந்து சென்று
எங்களை ஆறாத்துயரில் விட்டீரே
ஆருயிர் உறவே.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.