ஆறுதல்

மரண அறிவித்தல்

வேலாயுதம் மகேஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலாயுதம் மகேஸ்வரன்

வயது 6311 ஏப்ரல், 1956 – 31 அக்டோபர், 2019

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
Frankfurt Am Main

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் மகேஸ்வரன் அவர்கள் 31-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம், ராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நடராஜா, சகுந்தலை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவளராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகுணா, ரமணன், சுகந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மனோகரன், ரஞ்சிதமலர் ஆகியோரின் பாசமிகு தம்பியும்,

பரமேஸ்வரன்(நோர்வே), ராஜவதனி(ஜேர்மனி), மதனமாலா(இந்தியா), வசந்தராணி, பிரேமாவதி, மதிவதனி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவனேஸ்வரன், ஜெயகீதா, சுவாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சந்தீவ், சிம்ராட், சௌகிட், ரஸ்னா, ரபீனா, ராகனா, சமீரா, சட்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்கும் வடமராட்சி பருத்தித்துறையில்11/APR/1956 ஆம் ஆண்டில் திரு.திருமதி வேலாயுதம் ராஜேஸ்வரி தம்பதிகளுக்கு அன்பு மகனாக திரு.மகேஸ்வரன் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் சிறுவயதில் அன்பும் பண்பும் கொண்டு பரம்மேஸ்வரன், ராஜவதனி, மதனமாலா, வசந்தராணி, பிரேமாவதி, மதிவதனி, மனோகரன், ரஞ்சிதமலர் போன்ற சகோதரங்களுடன் தவழ்ந்து வளர்ந்து வாழ்வில் உயர்ந்ததுடன் திரு.திருமதி நடராஜா சகுந்தலை தம்பதிகளின் அன்பு மகளாக பவளராணி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தனர்.

முழுக் கதையையும் வாசிக்க

இருவரின் இன்ப வாழ்க்கையின் பயனாக சுகுணா, ரமணன், சுகந்தன் போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சிவனேஸ்வரன், ஜெயகீதா, சுவாஜினி என்பவர்கருக்கு திருமணம் முடித்து வைத்து சந்தீவ், சிம்ராட், சௌகிட், ரஸ்னா, ரபீனா, ராகனா, சமீரா, சட்வின் எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

மேலும் அன்பும் பண்பும் கொண்ட இவர் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கியது மட்டுமல்லாது கடின உழைப்பாளியாக வாழ்ந்ததுடன், அன்பும் பாசமும் நிறைந்த மனம் கொண்டவர்

இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 31.10.2019 இல் 63 வயதில் ஜேர்மனியில் உள்ள Frankfurt Main நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.

பருத்தி மகனே பாச அப்பாவே
விருத்தி பெற்றோம் உங்கள் அற்பணிப்பால்
வருத்தி உழைத்து வாழ்வை ஒளியாக்கிய
பெரும் தலைவனே எங்கள் குல மகனே
வருந்தி அழுகிறோம் வாசல் தெய்வமே

பிற அறிவித்தல்கள்

  1. 30 நவம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.