நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வெள்ளைசாமி சுப்பையா
வயது 6713 நவம்பர், 1951 – 16 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Leeuwarden
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரிலும், மேலும் பல வழிகளிலும் எமக்கு ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், வெளிநாடுகளிலிருந்து தொலைபேசி மூலமாகவும், வேறு வழிகளிலும் எம்மை தொடர்பு கொண்டு அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்ட உறவினர்கள், நண்பர்கள், அனைவருக்கும் அஞ்சலி பிரசுரங்களை வெளியிட்டு தங்கள் உள்ளத் துயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் எமக்கு ஆறுதல் தந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவரும், உதவிகள் புரிவதில் வல்லவருமான சுப்பையா வாழ்க்கை வரலாறிது...
அன்பும் பாசமும் நிறைந்த தமிழர்கள் வாழும் யாழ்ப்பாணத்தில் வெள்ளைசாமி வள்ளிமயில் தம்பதிகளின் மகனாக சுப்பையா அவர்கள் 13/NOV/1951ஆம் ஆண்டு பிறந்தார். இவர் சரஸ்வதி, சிவலிங்கம் மற்றும் சதாசிவம் போன்ற உடன்பிறப்புக்களுடன் பாசமாக பழகி ஓடி ஆடி விளையாடி வளர்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
பள்ளிப் படிப்பை முடித்ததும் யாழ் நகரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் சுகிர்தாம்பாள் வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வந்த காலக்கட்டத்தில் அவருடன் பழகி காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டதுடன் இல்லற வாழ்வை சந்தோசமாக வாழ்ந்தன் பயனாக விஜயரேகா, பிரிஷாந்தினி, சுஜிதரன்,திவ்யன் போன்ற அன்புச் செல்வங்களைப் பெற்று, நற்பண்புகளை போதித்து, அன்பாக வளர்த்து வந்த வேலையில் குடும்ப சூழல் காரணமாக அனைவரையும் பிரிந்து சவுதியரேபியாவிற்க்கு வேலை தேடிச் சென்று சிறிதுகாலம் அங்கு வேலை செய்து வந்தார்.
மீண்டும் தாயகம் திரும்பிய இவர் கொழும்பில் தொழில்புரிய தொடங்கிய காலத்தில், எதிர்பார்க்காத பேரடியாக 1991இல் தனது மகன் திவ்யன் மரணமடைந்ததும், தாங்கமுடியாத வலியுடன் வாழ்வில் நடைபோட்ட இவர், மீண்டும் வேலையை தேடி நெதர்லாந்து சென்று நன்கு உழைத்து 2002 இல் குடும்பத்தை தன்னுடன் வரவழைத்து, தனது அன்பு பிள்ளைகளை நன்கு படிக்கவைத்து, அவர்களுக்கு நல்ல வாழ்க்கை துணைகளாக கந்தராஜா, சுதர்சன், பிரதீபா போன்றோரைத் தேர்ந்தெடுத்து திருமணம் முடித்துவைத்தார்.
இனிமையாக குடும்பத்தோடு வாழ்ந்து வந்த இவர் வாழ்வில் யார் கண் பட்டதோ 2005ஆம் ஆண்டு எதிர்பாராது விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு மூலையில் இரத்தம் உறைந்து உணர்ச்சி அற்று மருத்துவமணை படுக்கையில் அனுமதிக்கபட்டபோது, தனது குடும்ப உறவுகளின் அழுகுரல் சத்தம் அவரின் செவிகளில் ஊடுறுவி அவரின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பியது. அதன் காரணமாக மெல்ல குணமடைந்த இவர் Helicopter மூலம் மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு மேல் கோமா நிலையில் இருந்து படிப்படியாக அதிலிருந்து மீண்டு வந்தார்.
2013 இல் வீதியில் நடந்து செல்லும் போது கீழே விழுந்து முன்நெற்றியில் அடிபட்டதும் வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வந்த இவர் தொலைக்காட்சி பார்ப்பதை தனது பொழுது போக்காக கொண்டு வாழ்ந்து வந்தார்.
இதேவேளை எல்லோரிடமும் அன்பாக பழகி, சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், பாசத்தை காட்டி, தனது பிள்ளைகளிடம் ஒரு அன்பு தந்தையாக நடந்து, அனைவரிடத்திலும் மரியாதையாக பேசுபவரான இவர், தனது பேரப்பிள்ளைகளான கரிஸ், காவியன், பிறஜன், அஜிஷ் என்பவர்களிடம் அதிக நேரத்தை செலவிட்டார்.
தனக்கு ஏதேனும் கஷ்டமோ, துன்பமோ ஏற்பட்டாலும் அதை தனது உறவுகளிடம் கூட பகிராமல் தனக்குள்ளேயே வைத்திருப்பவரான இவர் கடைசியாக தனது பிரிவு எனும் துன்பத்தை அவர்களுக்கு வழங்கி 16.09.2019 இல் 67 வயதில் நெதர்லாந்தில் காலமானார்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

