ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலுப்பிள்ளை கனகரெத்தினம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலுப்பிள்ளை கனகரெத்தினம்

வயது 8524 ஜூலை, 1934 – 3 அக்டோபர், 2019

பிறந்த இடம்
சரவணை கிழக்கு
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சரவணை கிழக்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை கனகரெத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

வாழ்க்கை என்னும் பாதையிலே
எம்மோடு பயணித்த தெய்வமே!
இன்றுடன் ஓராண்டு
முடிந்தாலும் உங்கள் நினைவுகள்
எம்மை விட்டு விலகாது!

ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?

அன்பு ஒன்றை வாடகையாய் கொடுத்து எம்
நெஞ்சினில் வாழ்கிறாய் இன்று!
தூண்டில்பட்ட மீனாய் துடிக்கின்றோமப்பா
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்கள்
நினைவு என் நெஞ்சை விட்டு பிரியாது

இன்று பிரிவு என்னும் துயரால்
ஓராண்டு ஓடி மறைந்தாலும்
எம் உள்ளங்களில் என்றும் நீங்காமல்
நிலைத்து வாழ்வீர்கள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

வாழ்க்கையில் தனது சொந்த உழைப்பால் முன்னேறியவரும், உறவுகளிடம் பாசத்தை அதிகம் பொழிபவருமான வேலுப்பிள்ளை கனகரெத்தினம் அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், புகையிலைத் தோட்டம், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த சரவணை கிழக்கில் 24/JUL/1934 ஆம் ஆண்டில் வேலுப்பிள்ளை சின்னம்மா தம்பதிகளுக்கு அருமை மகனாக கனகரெத்தினம் அவர்கள் பிறந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

சிறுவயதில் தந்தை அன்பைப் பெற்று மடிமீது தவழ்ந்த இவருக்கு காலனின் சதியால் 8 வயதில் தந்தையினை இழந்த பின்னர் அம்மாவின் அணைப்பிலும் அன்பிலும் வளர்ந்த இவர், உலகநாயகி, கமலாம்பாள், கந்தசாமி போன்ற தனது சகோதரங்களோடு குறும்புகள் செய்து வளர்ந்தார்.

குடும்ப சூழ்நிலை கருதி படிப்பை பாதியில் நிறுத்தி, புகையிலை வியாபாரத்தை செய்யத் தொடங்கிய இவர், வளர்ந்து பெரியவரானதும் நடராசா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளான விஜயலட்சுமி என்பவரை 1961 ஆம் ஆண்டு திருமணம் முடித்து, இல்லற வாழ்வை இனிமையாக வாழ்ந்ததன் பயனாக சர்வா, பரன், தற்பரா,வவி தயாளன், சிவா, நிர்மலா, மாலினி, ஜெகன் எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று நல்ல போதனைகளை கூறி வளர்த்தார். தனது பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும் கயல், சிவராணி, ராசா, கார்த்திகா, சுஜி, சுகந்தி, பவா, சதீஷ், சுபா என்பவர்களைத் தேர்ந்தெடுத்து திருமணம் முடித்து வைத்தார்.

நாட்டின் சூழல் காரணமாக பிரான்ஸிற்க்கு குடிபெயர்ந்து வாழத்தொடங்கிய இவர், தொலைக்காட்சி பார்ப்பதையும், தோட்டவேலை செய்வதையும், பேரப்பிள்ளைகளோகளோடு கொஞ்சி விளையாடுவதையும் தனது பொழுதுபோக்காக கொண்டிருந்தார்.

கடைசி காலத்தில் தனது மனைவியை பிள்ளைகள் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கூறிவந்த இவர், தன்னை நல்ல முறையில் வழியனுப்ப வேண்டும் என்பதையும் முன்னரே கூறிவந்தார். வயது மூப்பின் காரணமாக தனது அன்பிற்குரிய அனைவரையும் விடுத்து 03.10.2019 இல் தனது 85 வயதில் பிரான்ஸில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.

பிற அறிவித்தல்கள்

  1. 4 அக்டோபர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. 1 நவம்பர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.