மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேல்முருகு செல்வச்சந்திரன்
வயது 6012 மார்ச், 1959 – 9 ஜூன், 2019
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- சூரிச்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேல்முருகு செல்வச்சந்திரன் அவர்கள் 09-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று Zurich ல் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேல்முருகு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினம், மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
கவிதன் அவர்களின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற கந்தசாமி, லிங்கவதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கிருஸ்ணதாஸ், நேமிநாதன், மதனதாஸ், இரட்ணதாஸ் மற்றும் திரு.குபேந்திரராசா(புவி- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரபாகரன், பிரதீபன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்ற பிரகாஷ், வினோஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கேஷ்வின் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன்,எதற்கும் பயப்படாத மக்களும், கப்பல் கட்டி வாணிபம் செய்த இடமும், கடலுணவு, மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த வல்வெட்டித்துறையில் 12/MAR/1959 ஆம் ஆண்டில் வேல்முருகு செல்லம்மா தம்பதிகளுக்கு அன்பு மகனாக திரு.செல்வச்சந்திரன் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அழகும் நிறைந்த இவர் கந்தசாமி, லிங்கவதி போன்ற உடன்பிறப்புகளுடன் அன்புடன் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் இரத்தினம் மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மகள் சகுந்தலாதேவி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து கவிதரன் எனும் அருமையான பிள்ளையைப் பெற்று வளர்த்து திருமணம் முடித்து வைத்து கேஷ்வின் என்ற பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராக விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளை, பேரப்பிள்ளை, உற்றார், உறவினர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 09.06.2019 இல் 60 வயதில் சுவிஸில் உள்ள சூரிச் நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
”வல்வை மகனே எங்கள்
வலிமை உள்ளமே
வெள்ளை மனமே இவரின்
வேங்கைக் குணமே
மெல்லப் பேசும் அனைவர்
வள்ளல் உறவே
கள்ளம் அற்ற மனதுடன்
வாழ்ந்து மறைந்தீரே”
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

