ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

வேலும்மயிலும் கனகம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

வேலும்மயிலும் கனகம்மா

இளைப்பாறிய அதிபர் - அல்வாய் தெற்கு, யாழ்ப்பாணம்

வயது 7821 ஏப்ரல், 1932 – 9 பிப்ரவரி, 2011

பிறந்த இடம்
Alvai south
வாழ்ந்த இடம்
Alvai south

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அல்வாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலும்மயிலும் கனகம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

அம்மா!
பாசத்தின் திருவுருவே!
பண்பின் பிறப்பிடமே!
ஐயிரு மாதம் பக்குவமாய்
உதிரத்தில் எம்மை சுமந்து
உலகினிற்கு தந்தவரே!

அன்பினிய தாயாகி
அதற்குமேல் நல் ஆசானாகி
பிள்ளைகள் எழுவர் நாம் ஐவரானோம்
பிரிவில் துவண்ட பின் எமக்காய் துளிர்த்து,
நாம் வாடிய போதெல்லாம் வதங்கி
நாம் இன்பத்தில் திளைத்த போதினில் மனம் குளிர்ந்து
கண்ணை இமை காப்பது போல் எமைக்காத்து
எடுத்த காரியம் யாவினிலும் வென்றிடுவீர்,
எள்ளளவும் பிசகாத நாணயத்தின் சிகரம் நீர்!
இற்றைவரை எமக்காய் நல்வழிகாட்டி
இனிய எம்வாழ்வதனில் நிறைவு காண்டீர்!

முப்பத்தியாறு வருட ஆசிரிய சேவையிலே
நீங்கள் நிலைத்திருந்த காலங்கள்
எம்மை பெருமை கொள்ள வைக்குதம்மா!
உம் மாணவர் உங்கள் பெருமை சொல்ல
எம் மனம் பூரித்துப் போனதம்மா!

அப்பாவை நாம் இழந்து
ஆறுமாதம் தானே அம்மா!
இல்லறத்தின் நல்லறமோ
உம்மை அவர் அழைத்தாரோ!
நாம் கலங்கி நிற்கின்றோம்,

காலத்தின் கட்டளையால்
பிறதேசமதில் வாழும் நாம்
எம்முடனே உம்மை அழைத்து
அன்புடனே உபசரித்து
பட்ட கடன் நாமடைக்க
துடியாய்த் துடித்திருந்தோம்
அதற்காய் காத்திருந்தோம் - ஆனால்,
காலனவன் முந்திக் கொண்டானேம்மா - உங்களை
தனியாய் விட்ட துயர் எம்மை வாட்டுதம்மா

உங்கள் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திக்கும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

கொழும்பில் நடைபெற்ற அம்மாவின் இறுதிநிகழ்வுகளில் கலந்துக்கொண்டவர்களுக்கும் சகல வழிகளிலும் எமக்கு ஒத்தாசை புரிந்தவர்களுக்கும் தொலைபேசி வாயிலாக எம்முடன் துயர் புரிந்தவர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவத்துக் கொள்கின்றோம்.

எங்கள் அன்புத் தெய்வத்தின் வீட்டுக்கிருந்திய நிகழ்வுகள் 11-03-2011 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் நடைபெறும், அன்றைய தினம் அல்வாய் குமிழடிப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெறும் ஆத்ம சாந்திப் பூஜையிலும், அன்னதான நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் உற்றார், உறவினர், அயலவர்களை அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.