மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
வேலுப்பிள்ளை கந்தசாமி
ஓய்வுபெற்ற தபால் ஊழியர் M.S.O KKS
வயது 863 பிப்ரவரி, 1933 – 8 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- மயிலிட்டி
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மயிலிட்டி கொத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கந்தசாமி அவர்கள் 08-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்றவர்களான விசாகப்பெருமாள், வள்ளியம்மை, செல்லப்பாக்கியம் மற்றும் சம்மந்தபிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
சியாமினிதேவி(ஜேர்மனி), சந்திரன்(ஜேர்மனி), முரளீதரன்(ஜேர்மனி), பரணிதரன்(லண்டன்), வேலானந்தன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சௌந்தரராசா, நவஜோதி, ஜெயாஞ்சலி, ஜஸ்மின், ஐந்தினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, நாகேஸ்வரன் மற்றும் வாமதேவன், மதிவதனி அவர்களின் அன்பு மைத்துனரும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புச் சகலனும்,
ஜனேஸன் சாரங்கா, பிரியங்கா, சந்துஷன், சகிந்தன், கரணி, மிதிலா, மாதுஷா, மிலக்ஷன், பகலவன், லாகீஸ், வைஸ்ணவி, லதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
வாழ்க்கை வரலாறு
ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் கல்வியறிவு கூடிய சமுதாயமாக விளங்கும் அழகிய மயிலிட்டியில் 03/FEB/1933 ஆம் ஆண்டில் திரு.திருமதி வேலுப்பிள்ளை அன்னப்பிள்ளைதம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.கந்தசாமி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் விசாகப்பெருமாள்,வள்ளியம்மை,செல்லப்பாக்கியம்,சம்மஞ்தபிள்ளை போன்ற உடன்பிறப்புகளுடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி சின்னையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகள் சிவபாக்கியம் என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தனர்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர்கள் இருவரின் வாழ்க்கையின் பயனாக சியாமினதேவி, சந்திரன், முரளிதரன், பரணிதரன், வேலானந்தன் எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சௌந்தரராசா, நவஜோதி, ஜெயாஞ்சலி, ஜஸ்மின், ஐந்தினி என்பவரை திருமணம் முடித்து வைத்து சாரங்கா, பிரியங்கா, சந்துஷன், சகிந்தன், கரணி, மிதிலா, மாதுஷா, மிலக்ஷன், பகலவன், லாகீஸ், வைஸ்ணவி,லதுஷன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் தபால் ஊழியராக ( M.S.O ) கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் கடின உழைப்பாளியான இவர் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 08.10.2019 இல் 86 வயதில் ஜேர்மனியில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
மயிலை மண்ணில் மகத்துவ உறவே
துயில்தல் விடுத்து துவழ்தல் மறந்து
பயிற்று உயர்ந்த பாச உயிரே
நயிந்து நாங்கள் தினமும் வருந்த
பிரிந்து எங்கே போனீர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

